சத்தியமங்கலம், மார்ச் 30- நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலத்தில், திமுக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நீலகிரி நாடாளு மன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ. ராசா பேசியிருப்பதாவது:
கவனமாக எதிர்கொள்ள வேண்டிய தேர்தல் இது!
ஏறத்தாழ ஒரு கால் நூற்றாண்டு காலம் நாடாளுமன்றத்தில் உறுப்பி னராக, இணை அமைச்சராக இருக் கும் வாய்ப்பு கிடைத்தது. பல்வேறு பிர தமர்களை, அமைச்சர்களை பார்த்தி ருக்கிறேன். பல மாநிலங்களின் முத லமைச்சர்கள் என்னை சந்தித்துள்ள னர். இத்தனையும் பார்த்ததற்குப் பிறகு சொல்கிறேன், பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் சொன்னதைப் போல இந்த தேர்தல் மிகக் கவனமாக எதிர் கொள்ள வேண்டிய தேர்தல்.
ஒரு மோசமான சர்வாதிகார ஆட்சி
அப்படி ஒரு மோசமான, சர்வாதி கார ஆட்சி ஒன்றியத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் இரண்டு முதலமைச்சர்கள் சிறையில் இருக்கின்றனர். எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும், தலைவர் களின் பிள்ளைகளும் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற துறைகளால் அச்சுறுத்தப்படு கின்றனர். நேர்மையாக ஆட்சி நடத்து பவர்களுக்கு இவ்வளவு பயம் வர வேண்டிய அவசியம் என்ன?
சர்வதேச ஊடகங்கள் சிரிக்கின்றன
தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டால், அமைச்சர்களின் அதி காரம் போய்விடும். அவர்களுடன் வரும் போலீஸ்காரர் போய்விடுவார். இது எல்லாருக்கும் பொருந்தும். எந்த கையெழுத்தும் போட முடியாது. ஆனால் மோடி பக்கத்தில் இருக்கும் நாட்டிற்குச் சென்று அங்கு கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த நாட்டிற்கு நிதி உதவியும் தந்து விட்டு வருகிறார். இதைப் பார்த்து, சர்வதேச ஊடகங்கள் சிரிக்கின்றன. அர விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டி ருக்கிறார். அமெரிக்கா, ஜெர்மன் கண்டிக்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு
இப்படி ஒரு பதற்றமான சூழலில் தான் இந்த தேர்தலை நாம் எதிர் கொள்ளப் போகிறோம். என்ன கார ணம்? இந்தியா என்ற துணைக்கண் டம் வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற நாடு. உணவு, உடை, பண்பாடு, மொழி, பழக்க வழக்கங் களை அங்கீகரித்து அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. தாளவாடியில் ஒரே காம்பவுண்டிற்குள் மசூதி, சர்ச் மற்றும் மாரியம்மன் கோவில் இருக்கி றது. இடையில் எந்த சுவரும் இல்லை. எந்தக் கலவரமும் இல்லை. உண்மை யான மத நல்லிணக்கம் இங்கே இருக்கிறது.
ஏலமே இல்லாமல் ஸ்பெக்ட்ரம் முறைகேடு
ஸ்பெக்ட்ரத்தில் 1.76 ஆயிரம் கோடி ஊழல் என ராசாவை சிறை யில் வைத்தீர்களே! நாங்களே வாதாடி ஊழல் செய்யவில்லை என நிரூபித்து விட்டு வந்தோம். ஆனால் இன்று அதே ஸ்பெக்ட்ரத்தை மீண்டும் ஏல முறை இல்லாமல் தனக்கு வேண்டிய வர்களுக்கு தாரை வார்த்திருக்கி றார்கள். அந்த கம்பெனிகள் பிஜேபிக்கு 500, 600 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கின்றன.
பதிலளிக்க வராமல் ஓடி ஒளியும் பிரதமர்
ஒரு நாடாளுமன்ற நடவடிக்கை யில் அரசாங்கத்தின் மீதோ, பிரதம ரின் மீதோ குற்றச்சாட்டு எழுந்தால், குற்றச்சாட்டிற்குப் பதில் சொல்ல வேண்டியது அந்த அமைச்சர், பிர தமரின் கடமை. அதானி பிரதமரோடு வெளிநாட்டிற்குப் போனார். பல வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார். அதில் பல ஆயிரம் கோடி தில்லுமுல்லு நடந்திருக்கிறது என்று அமெரிக்க ஹிண்டன்பர்க் நிறு வனம் சொன்னது. அப்போது சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ் உள்ளிட்ட நாங்க ளெல்லாம் கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு வந்து பதில் சொல்லுங்கள் என்றோம். 15 நாட்களாக பிரதமர் வர வில்லை. நாடாளுமன்றம் ஒத்தி வைக் கப்பட்டது.
மணிப்பூர் பற்றி வாய் திறக்கவில்லை
மணிப்பூரில் ஒரு பழங்குடியின, கிறிஸ்தவப் பெண்மணியை 250 பேர் முன்னிலையில் முழுதாய் நிர்வாண மாக்கி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். அது எல்லா தொலைகாட்சியிலும் வந்தது. அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பாஜக தான். அவரைக் கேட்டால் இங்கே இதெல்லாம் சாதாரணம் என்கிறார். அமித்ஷாவிடம் கேட்டால் எல்லாம் இயல்பாக உள்ளது என்கி றார். பிரதமரைக் கேட்டால் வாயே திறப்பதில்லை.
பில்கிஸ் பானுவுக்கும் நீதியில்லை
அதைவிடக் கொடுமை பில்கிஸ் பானுவிற்கு நடந்தது. குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்த போது, 3 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை, ‘பாரத் மாதா விற்கு ஜெ’ என்று கூச்சலிட்டபடி வந்த வர்கள் பர்தா போட்டிருந்தவரை நிர்வா ணமாக்கி பாலியல் வன்கொடுமை செய்தனர். பக்கத்தில் அழுதுகொண்டி ருந்த அவரது 3 வயது குழந்தையை காலை பிடித்துத் தூக்கி பாறையில் அடித்துக் கொன்றனர்.
இவர்கள் 15 ஆண்டுகள் தண்டனை பெற்றனர். 7, 8 ஆண்டு களுக்குப் பிறகு, அவர்களெல்லாம் பிராமணர்கள், நல்லவர்கள், தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள். அவர் களை விடுதலை செய்யலாம் என விடுவித்தனர். இதைப் பார்த்த உச்ச நீதிமன்றம் நீங்களெல்லாம் மனி தர்களா! சட்டத்தின் ஆட்சி இங்கு நடக்கி றதா! சாகும் வரை சிறையில் இருக்க வேண்டியவர்களை விடுவிப்பதா, தூக்கி உள்ளே போடு என்று சொன் னது. இப்போது உச்ச நீதிமன்றம் உங்களையே விமர்சித்துள்ளது; அதுபற்றி வாங்க பதில் சொல்லுங்கள் என்றால், அதற்கும் பதிலில்லை.
ஜனநாயகத்தை குலைத்த காட்டாட்சி
இதுவரை இந்த அரசாங்கத்தின் மீதோ, மோடியின் மீதோ எழுந்த குற்றச்சாட்டிற்கு பதில் சொன்னதே இல்லை. அவர்களாக வருவார்கள், கையெழுத்து போடுவார்கள், அவர்களுக்குத் தேவையான சட்டத்தை நிறைவேற்றுவார்கள். நாடாளுமன்றத்தை தேதி குறிப்பிடா மல் ஒத்தி வைத்து விடுவார்கள். இப்படி ஒரு ஜனநாயகத்தைக் குலைக்கின்ற காட்டாட்சியை நாம் பார்த்ததில்லை.
இவ்வாறு ஆ. ராசா பேசியுள்ளார்.