ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் மேட்டுக்கடை தங்கம் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி தலைமை வகித்தார். அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான சு.முத்துசாமி முன்னிலை வகித்தார். இதில், வேட்பாளர் கே.இ.பிரகாஷ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், சிபிஐ தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.டி. பிரபாகரன், விசிக நிர்வாகி சாதிக் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் தலைவர்கள் உரையாற்றினர்.