காதலுக்கும், குடும்ப பாசத்திற்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும், வியக்க வைக்கும் வாழ்வியல் முறையை கொண்டது இருவாச்சி பறவைகள். நூற் றாண்டு பழமை வாய்ந்த கல்லார் அரசு தோட்டக்கலை பழப் பண்ணயில் முதல் முறையாக கூடு அமைத்து குஞ்சு பொரித்து பரா மரித்து வரும் ஹார்ன்பில் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இருவாச்சி பறவை. அதன் உருவ அமைப்பை போன்றே பறவையினங்களில் தனித்துவமான வாழ்வியல் முறை யினை கொண்டது இருவாச்சி என்றழைக்கப்படும் ஹார்ன்பில் பறவை. தன் வாழ்வில் ஒரே ஒரு இணையை தேடிக்கொள்ளும் இருவாச்சி பறவைகள், இரை தேடுவதில் ஆரம்பித்து இளைப் பாறுவது வரை எங்கு சென்றாலும் ஆண் பறவையும், பெண் பறவை யும் இணைந்தே செல்கின்றன. காதலாகி கருவாகின்ற இனப் பெருக்க காலத்தில் அடர்ந்த மழைக்காடுகளில் இருக்கின்ற உயரமான மரங்களில் இயற்கை யாய் அமையும் மரபொந்து களை தேடி அலைந்து மரக் கூட்டை அமைத்து கொள் கின்றன. இணைந்தே திரிந்த இரு வாச்சி ஜோடி முதல் முறையாக பிரிந்து பெண் பறவை தேர்ந் தெடுக்கப்பட்ட அந்த மரப்பொந் திற்குள் சென்று விடுகிறது. பொந் திற்குள் சென்ற பெண் பறவை தன் இறகுகளை உதிர்த்து உட் பகுதியை மெத்தை போல் மென்மையாக்கி விடுகிறது. ஆண் பறவையோ பெண் பறவை உள்ள மரப்பொந்தை தன்னு டைய உமிழ் நீர், ஈரமான மண் மற்றும் மர சிதவைகளை கொண்டு மூடி விட்டு, உணவு கொடுக்க மட்டும் சிறு துவா ரத்தை உருவாக்கி விடுகிறது. தன் இயற்கையான இறகுகள் மற்றும் பொலிவை இழந்து மெலிந்து விடும் பெண் பறவை அக்கூட்டு குள்ளேயே இரண்டிலிருந்து மூன்று வரை முட்டைகளையிடும் பெண் பறவை அதனை ஏழு வாரங்கள் வரை அடைகாக் கின்றது.
தாய் பறவையின் தியாகம் மெய் சிலிர்க்க வைக்கும் அதே வேலையில் ஆண் பறவை காடெங்கும் தேடிய லைந்து தனது அலகுகளுக்குள் சேமித்து எடுத்து வரும் சிறு பழங்கள் போன்ற உணவை கூட்டின் துவாரம் வழியே தினசரி நான்கு முறையாவது பெண் பறவைக்கு ஊட்டி விடுகிறது. ஏற்கனவே இறகுகளை இழந்து இரண்டு மாதங்கள் கூட்டுக்குள் அடைந்து கிடக்கும் பெண் பறவையினை தன் உயிர் போல் உணவளித்து மிக கவன மாக பராமரிகின்றது ஆண் பறவை. இரை தேடி செல்லும் ஆண் பறவை வேட்டையாட படுவது போன்ற ஏதேனும் ஒரு காரணத்தால் இறந்து விட்டால், பெண் பறவை தன் குஞ்சுக ளோடு உயிர் விடுவதை தவிர வேறு வாய்ப்பேயில்லை. குஞ்சுகள் பிறந்ததும் கூட்டை உடைக்கின்ற ஆண் பறவை பெண் பறவையை வெளியில் கொண்டு வருகிறது. பறக்க இயலாமல் பெண் பறவையின் உடல் தேறும் வரை அதற்கு உண வளித்து உதவுகிறது. 30 முதல் 40 ஆண்டுகள் வரை உயிர் வாழும் இப்பறவைகள் அருகி வரும் பறவையினமாக ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பறவையின் எச்சங்கள் உயிர்ப்புத்தன்மை மிக்கவை என்ப தால் இவற்றால் காடுகளில் மரங் கள் உருவாகின்றன. பாசப்பறவை களான இவற்றின் மஞ்சள் மற்றும் வெண்மை நிறம் கொண்ட நீண்ட வளைந்த அலகு, தலையின் மீதுள்ள மஞ்சள் நிற தலைகவசம் போன்ற அமைப்பு, ஹெலி காப்ட்டர் பறப்பது போன்ற ஓலி யுடன் நீண்ட சிறகுகளுடன் பறப்பது இதன் தனி சிறப்பாகும்.
கேரளத்தின் மாநில பறவையாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த இரு வாச்சி பறவைகளை மனிதர்கள் எளிதில் காண இயலாத அடர்ந்த மழைக்காடுகளில் மட்டுமே வசித்து இனப்பெருக்கம் செய்யும். இந்நிலையில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மேற்குத்தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள கல்லார் அரசு தோட்டக்கலை பழப் பண்ணயில் உள்ள ஒரு உயரமான இலவம்பஞ்சு மரப்பொந்தில் இரு வாச்சி பறவை குஞ்சு பொரித்து அடைகாத்து வருவது பறவியல் வல்லுநர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அடர்ந்த மலைக் காட்டின் நடுவே ஆங்கிலேயர் கள் ஆட்சி காலத்தில் 1900 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது இப்பழப் பண்ணை. ஆண்டு முழுவதும் சீரான கால நிலை நிலவும் இப் பண்ணையில் நாட்டில் வெகு சில இடங்களில் மட்டுமே விளையக் கூடிய துரியன், மங்குஸ்தான், வெண்ணைப்பழம், லிட்சி, ரம்புட் டான், வாட்டர் ஆப்பிள் உள்ளிட்ட எண்ணற்ற அரிய வகை பழங் களும், மூலிகை செடிகளும், மலர் களும் விளைகின்றன. நூற்றாண்டை கடந்தும் இது வரை நிகழாத அதிசயமாக இங்குள்ள மரத்தை இருவாச்சி பறவை குடும்பம் தேர்வு செய் துள்ளது வியப்பானதாக கூறப் படுகிறது. இப்பழப்பண்ணையை பார்வையிட தினசரி மக்கள் வந்து செல்லும் நிலையில் இவற்றை யாரும் தொந்தரவு செய்திடாமல் பண்ணை நிர்வாகம் கண்கா ணித்து காப்பது மிகவும் அவசியம். -இரா.சரவணபாபு, மேட்டுப்பாளையம்