திருப்பூர், செப். 1 – திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேரில் விதைப்பு செய் யப்பட்ட நிலக்கடலை பயிர்கள் போதிய மழை இல்லாததால் மடிந்து விட்டன. இழப்பை சந்தித்த விவசாயி களுக்கு மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர கத்தில் வியாழனன்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் ஆர்.குமார் கூறியதா வது: திருப்பூர் மாவட்டத்தில் விவ சாயிகள் இந்த ஆண்டு வைகாசி பட் டத்தில் மானாவாரியாக சுமார் 5,000 ஹெக்டேர் நிலக்கடலை விதைப்பு செய்திருந்தனர். குறிப்பாக அவினாசி வட்டாரத் தில் போத்தம்பாளையம், புலிப்பாறு, தத்தனூர், புஞ்சை தாமரைக்குளம், வடுகபாளையம், குட்டகம், மங்க யற்கரசிபாளையம், தண்டுக்காரன் பாளையம், முறியாண்டம்பாளை யம், கானூர், சேவூர், பாப்பாங்குளம், மேட்டுப்பாளையம் ஆகிய கிராமங் களிலும், திருப்பூர் வடக்கு வட்டாரத் தில் சொக்கனூர், பட்டம்பாளையம், தொரவலூர், வள்ளிபுரம் மேற்குப் பதி ஆகிய கிராமங்களிலும், ஊத்துக் குளி வட்டாரத்தில் நல்லிக்கவுண்டம் பாளையம், குறிச்சி புதுப்பாளையம், கொமரக்கவுண்டன்பாளையம், செட்டிகுட்டை, கம்மாளகுட்டை உள் ளிட்ட கிராமங்களிலும் நிலக்கடலை விதைப்பு செய்யப்பட்டுள்ளது. போதிய மழையளவு இல்லாத தாலும், உரிய நேரத்தில் கோடை மழை பொழியாததாலும் பூ வைத்த கடலை செடிகள் அப்படி அப்படியே மடிந்து விட்டன. சில பகுதிகளில் பிஞ் சுகளோடு கருகி காய்ந்து விட்டன. இன்றைய விலைவாசியில் முட்டு வழிச் செலவு உயர்ந்துள்ள நிலை யில் விதை பருப்பு வாங்கி, ஏர் உழுது உரமிட்டு, களை எடுத்து, அதற்கான முதலீடு செய்து பராமரித்து வந்த விவசாயிகள் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நிற்கின்றனர். ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை முதலீடு செய்து இழப்பை சந்தித்துள்ளனர். ஆகவே, மாவட்ட நிர்வாகம் நிலக் கடலை சாகுபடி செய்து மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிக ளுக்கு வேளாண்மை துறை மூல மாக கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.குமார் கூறி னார்.