districts

img

பிறந்தநாள் பட்டாசு வெடித்து கொண்டாடியதை வெடிகுண்டு என வதந்தி பரப்பிய பாஜக பிரமுகர்

திருப்பூர், பிப்.14 - திருப்பூர் ஒன்றியம் இடுவாய் கிராமத்தில் பாஜக நிர்வாகி, அரு காமை குடியிருப்பில் பிறந்த நாள் பட்டாசு வெடித்ததை தனக்கு வெடி குண்டு அச்சுறுத்தல் என்று வதந்தி  பரப்பினார். காவல்துறையினர் விசாரணை யில் அருகாமை குடியிருப்பில் பிறந் தநாள் கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்கப்பட்டதை உறுதி  செய்தனர். இடுவாய் ஊராட்சியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியாக இருப்பவர் செல்வகுமார். இவர் தனது முகநூல் பக்கத்தில் புதன்கிழமை, வெடிகுண்டு அச்சு றுத்தல் பற்றி ஒரு பதிவை வெளி யிட்டிருந்தார். பாஜக காரன் மிரட் டலுக்கு அஞ்ச மாட்டான் என்று  குறிப்பிட்டு இருந்தார். சில புகைப் படங்களையும் வெளியிட்டு இருந் தார். சமூக வலைதளங்களில் இது குறித்து பாஜக சார்புள்ளவர்கள் பாஜக நிர்வாகிக்கு வெடிகுண்டு மிரட்டல் சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என்ற ரீதி யில் வதந்தியை பரப்பி வந்தனர். இதையடுத்து மங்கலம் காவல்  நிலையத்தில் இருந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு  செய்து விசாரணை மேற்கொண்ட னர். இதில் செல்வகுமார் வீட்டுக்கு  அருகாமையில் இருக்கும் ஏடி கால னியில் வசிக்கும் மோகனா என்ப வருக்கு செவ்வாய்க்கிழமை பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக மோகனாவின் சகோ தரர் அப்பகுதியில் பட்டாசு வெடித் துள்ளார் என்ற விபரம் தெரிய வந் தது. காவல்துறையினர், சம்பந்தப் பட்ட மோகனாவிடம் பிறந்த நாள்  கொண்டாட்டத்தை உறுதிப்படுத்த ஆதார் அட்டையை பெற்று சரி பார்த்து உள்ளனர். அவரது சகோ தரர் பட்டாசு வெடித்ததையும் ஒப்புக்  கொண்டிருக்கிறார். இதையடுத்து பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக  பட்டாசு வெடித்ததை காவல் துறை யினர் உறுதிப்படுத்தி சென்றனர். ஆனால் சாதாரணமான பட்டாசு வெடித்த விஷயத்தை, ஏதோ பாஜக வினரை குறி வைத்து சமூக விரோ திகள், வெடிகுண்டு வெடித்துள்ள னர் என்று பாஜகவினர் தங்களது வழக்கமான பாணியில் பெருமளவு வதந்தி கிளப்பி உள்ளனர் என் பது அம்பலமானது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு தன்னைக் குறிவைத்து பெட் ரோல் குண்டு வீசினர் என்றும் செல் வகுமார் புகார் கூறியதாகவும், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், பாட்டில் ஒன்று  அப்பகுதியிலேயே உடைந்து கிடந் தது, ஆனால் அது பெட்ரோல் குண்டு இல்லையென்றும் தெரிய வந்தது. இவர்கள் தங்கள் விளம்பரத் திற்காக இதுபோல் ஏதேனும் பரப ரப்பை ஏற்படுத்தி, அரசியல் ஆதா யம் தேட முயற்சி செய்து வருகின்ற னர், ஆனால் உண்மை அம்பல மாகி வருகிறது. இவர்கள் செயல் நம்பும் படியாக இல்லை என்று அப் பகுதி மக்கள் கூறினர்.