districts

img

வெண்மணி தியாகிகளின் 56 ஆம் ஆண்டு நினைவு  தினம்

வெண்மணி தியாகிகளின் 56 ஆம் ஆண்டு நினைவு  தினத்தை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சேலம் மாவட்டம், மேச்சேரி ஒன்றிய அலுவலகத்தில்  புதனன்று கொடியேற்று விழா நடைபெற்றது. இதில்  கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா,  மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.ராமமூர்த்தி, பி.தங்க வேலு, ஒன்றியச்செயலாளர் ஜி.மணிமுத்து, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், பேரூராட்சி கவுன்சிலர் பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.