தருமபுரி, மே. 7- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் 41ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் சங்க கொடியேற்று விழா நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம், நல்லம்பள்ளி ஒன்றியம், பாலக் கோடு, காரிமங்கலம், பென்னாகரம் ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு பகு திகளில் கொடியேற்று விழா நடை பெற்றது. இந்நிகழ்வில், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.தெய் வானை, மாநில துணைத்தலைவர் கோ.பழனியம்மாள், மாவட்ட தலை வர் எம்.சுருளிநாதன் உள்ளிட்ட அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் திரளா னோர் பங்கேற்றனர். திருப்பூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 41 ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் சங்க கொடி யேற்று விழா நடைபெற்றது. திருப்பூர் அரசு மருத்துவமனை அலுவலகம் முன்பு 41ஆவது அமைப்பு தின கொடி யேற்று விழா திங்களன்று நடைபெற் றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பும், மாவட்ட தொழிற் பயிற்சி அலுவலகம் முன்பும், திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை வடக்கு, தெற்கு உதவி கோட்ட அலுவலகங்கள், திருப்பூர் கண்காணிப் பொறியாளர் அலுவலகம், கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பும் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.