districts

img

விபத்துக்கான இழப்பீடு வழங்காத 4 அரசு பேருந்துகள் ஜப்தி

மே.பாளையம், பிப்.23- மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் விபத்து ஏற்படுத்தி விட்டு உரிய இழப்பீடு வழங்காத 4 அரசு  பேருந்துகள் நீதிமன்ற உத்திரவுப்படி ஜப்தி செய்யப்பட் டது. கோவை மாவட்டம்,மேட்டுப்பாளையத்தில் உள்ள ஜடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர்  கடந்த 2015 ஆம் ஆண்டு ஜடையம்பாளையம் மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்த போது, ஈரோட் டில் இருந்து உதகை நோக்கி வந்த அரசு பேருந்து மோதிய  விபத்தில் கந்தசாமி  உயிரிழந்தார். இதுகுறித்த வழக்கு  மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த  நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 17 லட்சம் ரூபாய்  இழப்பீடாக வழங்க, கடந்த ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட் டது. ஆனால் இதுவரை உரிய இழப்பீடு வழங்காமல் அரசு  போக்குவரத்து கழகத்தினர் இழுத்தடித்து வந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கபட்டவர்கள் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு படி, இழப்பீடு  வழங்காததால் மேட்டுப்பாளையம் அரசு பேருந்து பணி மனைக்கு சொந்தமான 4 பேருந்துகளை ஜப்தி செய்ய நீதி பதி உத்தரவிட்டார். அதன்படி, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வெள்ளியன்று காலை வந்த நீதிமன்ற அலுவலர் முனி ராஜ் மற்றும் வழக்கறிஞர்கள் முறையாக பேருந்து மீது ஜப்தி  நோட்டீஸ் ஒட்டி, பாதிக்கபட்டவர்கள் மற்றும் வழக்கறி ஞர்கள் முன்னிலையில் 4 பேருந்தை ஜப்தி செய்தனர்.