districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

2 ஆவது திருமணம்: 4பேர் மீது வழக்கு

கோவை, செப்.25- கோவையில், முதல் திருமணத்தை மறைத்து 2ஆவது திருமணம் செய்த இளைஞர் குறித்து பெண் அளித்த புகாரின்  பேரில் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.  கோவை சேர்ந்தவர் அமிர்தபஷினி (27). இவர் கோவை  மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு  அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது,  எனக்கும் கோவையை சேர்ந்த அமல்ராஜ் (30) என்பவருக்கும் திரு மணம் நடந்தது. திருமணத்தின்போது எனது பெற்றோர் 40 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் வரதட்சணையாக கொடுத்தனர். பின்னர் நாங்கள் மதுரையில் வசித்தோம். அப்போது அமல்ராஜ் என்னை அறையில் அடைத்து வைத்து  சித்ரவதை செய்தார். இதற்கிடையே நான் கர்ப்பமானேன். கணவரை பிரிந்து கோவையில் உள்ள எனது பெற் றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். அதன்பின்பு எனக்கு குழந்தை  பிறந்தது. இந்நிலையில், ஒரு பெண் என்னை தொடர்பு கொண்டு தான் அமல்ராஜின் முதல் மனைவி என்றும், அவர்  மூலம் எனக்கு 2 குழந்தைகள் உள்ளது எனவும் தெரிவித் தார். மேலும், இத்திருமணத்திற்கு அமல்ராஜின் தந்தை முருகன், தாய் கலா, சகோதரி அனு அப்சரா ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் முதல் திரு மணத்தை மறைத்து அமல்ராஜை, தனக்கு 2வது திருமணம்  செய்து வைத்துள்ளனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.  புகாரின் பேரில், போலீசார் அமல்ராஜ், முருகன், கலா, அனு அப்சரா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெயர்ந்து வரும் புதிய தார்ச்சாலை ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோவை, செப்.25- கோவை அருகில் புதிதாக அமைக்கப் பட்ட தார்ச்சாலை தரமற்றதாக உள்ளது என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பேரூராட்சி கடந்த சில ஆண்டுகளுக்கு  முன்னர் நகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டது. இந்த நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. கருமத்தம்பட்டி நகராட்சிக்கு திமுக-வை சேர்ந்த நித்யா மனோகர் தலை வராக உள்ளார்.  இந்நிலையில், கருமத்தம்பட்டி நகராட்சி  பகுதிகளில் சாக்கடை கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் புதிய தார்ச்சாலைகள் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. இதில்,  கருமத்தம்பட்டியில் இருந்து எலச்சி பாளையம் வரை சுமார் மூன்று கிலோமீட்டர்  தூரத்திற்கு தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இந்த தார்ச்சாலை தரமற்று உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, கருமத்தம்பட்டி நகராட்சி துணைத்தலைவர் யுவராஜ் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த  சமூக ஆர்வலர் பிரபாகரன் ஆகியோர்  வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தற்போது அமைக்கும் தார்ச்சாலை யில் உள்ள ஜல்லி கற்கள் அனைத்தும்  பெயர்ந்து வருகிறது.  எனவே, ஒப்பந்த தாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

டாஸ்மாக் கடைகள் மூடல்

கோவை, செப்.25- கோவையில் உள்ள டாஸ்மாக் கடைகள் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூடப்படும் என மாவட்ட ஆட்சியர்  அறிவித்துள்ளார்.  நாடு முழுவதும் செப்டம்பர் 28 ஆம் தேதி மிலாடி நபி,  அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்பட உள்ளது. எனவே அன்றைய நாட்களில் கோவை மாவட் டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும்.  பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல் களில் இயங்கும் மதுபான கூடங்களும் செயல்படாது. எனவே மேற்கண்ட நாட்களில் விதிமுறைகளை மீறி அந்த  பகுதிகளில் மதுபானம் விற்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நுகர்வோர் சமரச முகாம் இன்று துவக்கம்

நாமக்கல், செப்.25- நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இணையதள விசா ரணை நிறுத்தப்பட்ட நிலையில், புதிய சட்டப்படி இன்று சமரச முகாம்   துவங்குகிறது.  கோவை மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு  தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விரைவான விசாரணைக்காக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்திற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு  ஜூலை மாதத்தில் மாற்றம் செய்யப் பட்டன. இதில், ஐந்து ஆண்டு களுக்கு மேல் நிலுவையில் இருந்து  84 நுகர்வோர் வழக்குகள்,  நாமக்கல்  மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட   33 நுகர்வோர் வழக்குகள் உட்பட 180 நுகர்வோர் வழக்குகளில் கடந்த  ஆறு மாத காலத்தில் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்புகள் வழங்கப் பட்டுள்ளது. கோவையில் இருந்து மாற்றம்  செய்யப்பட்ட வழக்குகள் தினந் தோறும் மதியம் இணையதளம் மூலம் விசாரணை நடைபெற்றது. மாற்றம் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளிலும் தீர்வு காணப்பட்டு விட்டதால், இணையதள விசாரணை நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், நாமக்கல் மாவட்ட நுகர்வோர்  நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்த  இணையதள விசாரணை முகவரி இனி இயங்காது என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில், புதிய நுகர் வோர் வழக்குகளையும், தீர்ப்பை  நிறைவேற்றும் மனுக்களை நுகர் வோர் பல்வகை மனுக்களையும் கட்டாயம் இணையதளம் மூலமே  தாக்கல் செய்யும் நடைமுறை தொடர் கிறது என   தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாத காலத்தில் தீர்ப்பை நிறைவேற்றக்கோரும் 27 மனுக்களிலும், 90 நுகர்வோர் பல் வகை மனுக்களிலும் தீர்வு காணப் பட்டுள்ளது. இந்தாண்டு டிசம்பர்  இறுதிக்குள்ளாக இரண்டு ஆண்டு களுக்கு மேல் நிலுவையில் உள்ள  நுகர்வோர் வழக்குகள் அனைத் திலும் தீர்வு காண திட்டமிடப்பட் டுள்ளது. அதற்கு வழக்கு தாக்கல் செய்துள்ளவர்களும், எதிர் தரப்பி னர்களும் வழக்குகளை நடத்த ஒத்து ழைப்பு வழங்க வேண்டும் என்று  அந்த செய்தியில் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி, தமிழகத்தி லேயே முதல் முறையாக வரும் 26 ஆம் தேதி (இன்று) 53 வழக்குகள்  நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் சமரச நடவடிக்கைகளுக் காக பட்டியலிடப்பட்டுள்ளது.  நூற் றுக்கும் மேற்பட்ட வழக்கு தாக்கல்  செய்துள்ளவர்கள் மற்றும் எதிர் தரப் பினர்களுக்கு அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது.  இந்தசமரச பேச்சுவார்த்தைக் காக நாமக்கல் வழக்கறிஞர்கள்   ஆர்.  அய்யாவு, எஸ்.குமரேசன், சதீஷ் குமார், முரளி குமார், ராஜ்குமார்,  அந்தோணி புஷ்ப தாஸ் மற்றும்  திருச்செங்கோடு பாலு, பரமத்தி ராம லிங்கம் ஆகியோர் நடுவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.  வழக்கு தாக்கல் செய்துள்ள வர்களும், எதிர் தரப்பினர்களும் சமரச பேச்சுவார்த்தைக்கு வருகை தந்து தீர்வு காண ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என  நுகர்வோர் நீதிமன்றம் தெரிவித் துள்ளது.

பெண் சடலமாக மீட்பு

அவிநாசி, செப்.25 – அவிநாசி அருகே பெருமாநல்லூரில் பெண் சடலம் மீட்க் கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே ராக்கியா பட்டி பகுதியில் உள்ள சுடுகாட்டில் பெண் சடலம் கிடந்துள் ளது.  அப்பகுதியை சேர்ந்தவர்கள் காவல் துறையினருக்கு  தகவல் அளித்துள்ளனர். உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அப்பெண் 40 வயது மதிக்கத்தக்க  வடமாநிலத்தவர் என தெரிய வந்துள்ளது.  போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் தட யவியல் நிபுணர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சாமிநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசா ரணை மேற்கொண்டனர்.

குடிநீர் இணைப்பு தராவிட்டால் மக்களை திரட்டி போராட்டம்: சிபிஎம் முடிவு

அவிநாசி, செப். 25 – திருமுருகன்பூண்டி நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்பு ஒரு மாத காலத்திற்குள் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப் போவ தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித் துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருமுரு கன்பூண்டி கிளைச் செயலாளர்கள் கூட்டம்  ஞாயிறன்று நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.நந்தகோ பால், அவிநாசி ஒன்றியச் செயலாளர் அ.ஈஸ் வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். வெங்கடாசலம், நகர்மன்றக் குழுத் தலைவர்  சுப்பிரமணி, ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் உள்பட கிளைச் செயலா ளர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: திருமுருகன்பூண்டி நகராட்சியில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர்  வசித்து வருகின்றனர். பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டுள்ளது. முன்பு பேரூராட்சியாக இருந்த  திருமுருகன்பூண்டி நிர்வாகம் பல வருடங் களாக புதிய குடிநீர் இணைப்பு வழங் காமல் இருந்தது.  இதைத் தொடர்ந்து திருமுருகன்பூண்டி நகராட்சி நிர்வாகத்தினர் 2022ஆம் ஆண்டு  புதிய குடிநீர் இணைப்பு வழங்குவது என  முடிவு செய்து, அம்மாபாளையம் பகுதியில்  குடிநீர் இணைப்பு வழங்கத் தொடங்கினர்.  இதையடுத்து திருமுருகன்பூண்டி நகராட்சி யில் புதிய குடிநீர் இணைப்பு கேட்டு 2000க்கும்  மேற்பட்டோர் விண்ணப்பம் கொடுத்துள்ள னர். தற்பொழுது ஒரு வருடம் கடந்த நிலையி லும் புதிய குடிநீர் இணைப்புக் கொடுக்கா மல் நகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வரு கிறது. எனவே ஒரு மாதத்திற்குள் குடிநீர் இணைப்பு கொடுக்காவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருமுருகன்பூண்டி நக ராட்சி கிளைகள்  பொதுமக்களை திரட்டி  போராட்டம் நடத்துவதாக முடிவு செய்துள் ளது.

விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு விலங்குகளை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

உடுமலை, செப்.25 - உடுமலையில் விளைநிலங்களை சேதப் படுத்தும் காட்டு விலங்குகளை கட்டுப்ப டுத்த விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ள னர். உடுமலை பகுதிகளில் உள்ள விவசாய  விளைநிலங்களைக் காட்டு விலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. மேலும் விவசாயி களையும் தாக்கி வருவதால், விவசாயிகளி டையே அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே விளை நிலத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகள் பயத்தைப் போக்கும் வகையிலும் வனத்து றையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைப்பகுதியில் வறட்சி நிலவுவதால், காட்டு விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக மலை அடிவார பகுதிகளுக்கு வருகின்றன. சில வாரங்களாக காட்டு யானைகள் இப்பகுதியில் உள்ள தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. இது  விவசாயிகளை கவலையடையச் செய்துள் ளது.  உடுமலை மலை அடிவார பகுதிகளான  ஜல்லிபட்டி, கொங்குரர் குட்டை, பொன்லாம் மன் சோலை, அமராவதி உள்ளிட்ட பகுதி கள் விளைநிலங்களில் உள்ள தென்னை மரங் கள் மற்றும் ஆழ்குழாய் கிணற்றில் உள்ள  குழாய்களை காட்டு யானைகள் சேதப்ப டுத்தி வருகிறன. ஏற்கனவே காட்டுப்பன் றிகள் மலை அடிவார பகுதியில் இருந்து  பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும்  குடிமங்கலம் ஒன்றியப்பகுதி விவசாயிகளை  தாக்கி வருவதோடு, விளை நிலைங்களை யும்  சேதப்படுத்தி வருவதே முடிவுக்கு வராத  நிலையில், தற்பொழுது காட்டு யானைக ளும் விளைநிலங்ளை சேதப்படுத்தி வரு கின்றன. இது குறித்து விவசாயிகள் கூறுகை யில், பருவமழை இல்லாத காரணத்தால் காட்டுப் பகுதியில்  உள்ள விலங்குகள் தண் ணீர், உணவு தேடி விளை நிலங்களுக்கு வரத்  தொடங்கியுள்ளது.  வனத்துறையினர் காட் டுப்பகுதியில் விலங்குகளுக்குத் தண்ணீர் கிடைக்கவும், மலைப்பகுதியில் இருந்து விலங்குகள் வெளியே வராத வகையில் மலையடிவார பகுதியில் தடுப்பு வேலி அல்லது அகழிகள் அமைக்கவும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குக ளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் தென்னை மரங்கள், விளைபயிர்களுக்கு உரிய இழப்பீடுகளை உரிய நேரத்தில் வழங்க  வேண்டும் என்றும் விவசாயிகள் கோரி யுள்ளனர்.

அரசு பேருந்து பழுது: பொதுமக்கள் அவதி

அவிநாசி, செப்.25- சேவூர் அருகே அரசு பேருந்து பழுதடைந்ததால் கல்லூரி  மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பயணிகள் திங்க ளன்று காலை அவதிக்குள்ளானார்கள். கோபி, நம்பியூர், சாவக்கட்டுபாளையம், சேவூர் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஏராளமான  மாணவ, மாணவிகள் கோவைக்குச் சென்று கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். மேலும், கோவையில் உள்ள விடுதி யில் தங்கி, வாரம் ஒரு முறை தமது வீட்டிற்கு வந்து செல்லும்  மாணவ, மாணவியர்களும் அதிகம் உள்ளனர்.  இந்நிலையில்  வாரத்தின் முதல் நாள் திங்கள்கிழமை காலை கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட் டோர்  கோபியிலிருந்து கோவை செல்லும் அரசு பேருந்தில்  சென்று  கொண்டிருந்தனர். அரசு பேருந்து சேவூர்  பந்தம்பா ளையம் அருகே வந்த போது திடீரென பழுதடைந்தது. இத னால் திருப்பூரிலிருந்து மாற்றுப்பேருந்து ஏற்பாடு செய்யப் பட்டு  அனைவரும் கோவை சென்றனர். இதனால் ஏற்பட்ட  தாமதம் காரணமாக பேருந்தில் பயணம் செய்தவர்கள்  அவ திக்குள்ளானர்கள்.  இதுகுறித்து பயணிகள் கூறுகையில், பரபரப்பான  காலை  நேரத்தில் இது போல பேருந்துகள் பழுதடைந்ததால், நாங்கள்  செல்ல வேண்டிய நேரத்துக்கு செல்ல முடியாமல் கால தாமத மாகிறது. ஆகவே போக்குவரத்துத் துறையினர் இனியாவது  பேருந்துகளை ஆய்வு செய்து முறையாக பராமரித்து வழித்த டங்களில் இயக்க வேண்டும் என்றனர்.

சொத்து வரியை செலுத்தினால் ஊக்கத்தொகை

சேலம், செப்.25- அக்.31க்குள் சொத்து வரியை செலுத்தினால் 5 சதவிகித ஊக்கத்தொகை வழங்கப்படும் என சேலம் மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு உள்ளாட்சிகள் சட்டம்  1998 பிரிவு 84-ன் படி, 2023-2024 ஆம் ஆண்டின் 2 ஆம் அரை யாண்டிற்கான சொத்து வரியினை அக்.31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு வரியை செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் 5 சதவிகித ஊக்கத்தொகை அல்லது ரூ.5  ஆயிரம் வரை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள் என அர சால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சேலம் மாந கராட்சிப் பகுதியில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்க ளது சொத்து வரியினை இல்லம் தேடி வரும் வரி வசூலிப் பாளர்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மூலம் அமைந்துள்ள வரி வசூல் மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூல மாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக செலுத்தவும் வச திகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, சேலம் மாநகராட்சிக் குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரி யினை அக்.31 ஆம் தேதிக்குள் செலுத்தி அரசால் அறிவிக்கப் பட்டுள்ள 5 சதவிகித ஊக்கத்தொகை அல்லது ரூ.5 ஆயிரம் வரை பெற்று பயன்பெறலாம். அவ்வாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.

ஏற்காட்டில் கடுங்குளிர்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சேலம், செப்.25- மலைப்பிரதேசமான ஏற்காட்டில் இரவு நேரத்தில் பெய்யும் மழையால் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதன்படி, ஞாயி றன்று இரவும் ஏற்காட்டில் கனமழை கொட்டி  தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும், பல முக்கிய சாலைகள் சேறும், சகதி யுமாக காட்சியளிக்கின்றன. இதனால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தொடர்ந்து பெய்து  வரும் மழை காரணமாக ஏற்காட்டில் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மழை மற்றும் குளிர் காரணமாக இரவு 7 மணிக்கு மேல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரு வதில்லை. பகல் நேரங்களிலும் குளிர் தாங் கும் ஆடைகளான சுவட்டர், ஜர்கின் உள்ளிட்ட வற்றை அணிந்தே வெளியே வருகின்றனர். மழை காரணமாக ஏற்காட்டில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதேபோல் மலைப்பாதையில் ஆங்காங்கே உள்ள நீர் வீழ்ச்சிகள், கிளியூர் நீர்வீழ்ச்சி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். பொதுவாக வார இறுதி நாட்களில் ஏராள மான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் முகா மிட்டு பொழுதை கழித்து செல்வர். ஆனால், ஞாயிறன்று மழை பொழிவு காரணமாக குறைந்தளவே சுற்றுலா பயணிகளை காண முடிந்தது. சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் உள்ளூர் வியாபாரிகள் ஏமாற் றமடைந்தனர். ஏற்காட்டில் பெய்துவரும் மழை மற்றும் கடுங்குளிர் காரணமாக பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள் ளது.

சூதாட்டம்: 10 பேர் கைது
 

ஈரோடு, செப்.25- ஈரோடு மாவட்டம், கொடு முடியை அடுத்த அனில் தோட்டம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடை பெற்று வருவதாக கொடு முடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட னர். அப்போது அப்பகுதி யில் சிலர் பணம் வைத்து, சீட்டு கட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டி ருந்தனர். போலீசார் அவர் களை பிடித்து விசாரணை  நடத்தினர். இதைத்தொ டர்ந்து 10 பேரை காவல் துறை யினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.5 ஆயிரத்து 400 ஆகியவை பறி முதல் செய்யப்பட்டன.