கோவை, நவ.18- கோவை வனக்கோட்டத்தில் அண்மையில் நடத்தப்பட்ட கணக் கெடுப்பில் 228 பறவை இனங்கள் மற்றும் 170 பட்டாம்பூச்சி இனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறு கையில், 694 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட கோவை வனக்கோட்டத் தில் மதுக்கரை, போளூவம்பட்டி, கோவை, பெரியநாயக்கன்பாளை யம், காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை என 7 வனச் சரகங்கள் உள்ளன. இது பசுமை மாறா காடுகள், புல்வெளிகள், ஈர மற்றும் வட இலையுதிர் காடுகள், வட புதர்க்காடுகள் மற்றும் ஆற் றோர காடுகள் கொண்டவையா கும். இந்த 7 வனச்சரக பகுதிகளில் அண்மையில் கோவை வனத் துறை, இயற்கை மற்றும் பட்டாம் பூச்சி அமைப்பு, கோவை இயற்கை அமைப்பு மற்றும் உலகளாவிய இயற்கைக்கான நிதியம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து பற வைகள் மற்றும் பட்டாம் பூச்சிக ளுக்கான கணக்கெடுப்பு நடத்தப் பட்டது. இதற்காக கோவை கோட்ட உதவி வனப் பாதுகாவலர்கள் தினேஷ்குமார், செந்தில்குமார் மற் றும் வனச்சரக அதிகாரிகளின் மேற் பார்வையில் 82 இயற்கை ஆர்வலர் கள் மற்றும் 68 வன அலுவலர்கள் கொண்ட 16 குழுக்கள் அமைக்கப் பட்டன.
இந்த கணக்கெடுப்பில் கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், கன்னியா குமரி மற்றும் சென்னை பகுதி களைச் சேர்ந்த பறவை மற்றும் பட் டாம்பூச்சி ஆர்வலர்களோடு கேர ளம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் புதுவை மாநிலங்களிலிருந்தும் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த கணக்கெடுப்பில் மொத்தம் 228 பறவை இனங்கள் பதிவு செய் யப்பட்டன. இதில், 118 பறவைகள் பாசரைன் என்ற ஒரே வகையைச் சார்ந்தவை. மீதமுள்ளவற்றில் 25 வகையான நீர் வாழ் பறவைகள், 16 வகையான கழுகுகள் மற்றும் பருந்துகள், 11 வகையான குக்குறு வன் மற்றும் மரங்கொத்திகள், 10 வகையான மீன் கொத்திகள், பஞ்சு ருட்டான்கள் மற்றும் பனங்காடை, 8 வகையான புறா இனங்கள், 8 வகை யான குயில் இனங்கள், மயில் உள் ளிட்ட 7 தரைவாழ் பறவையினங்கள் கண்டறியப்பட்டன. மேலும், ஆந்தைகள், இருவாச் சிகள், உழவாரன்கள், தீக்காக்கை, வல்லூறு மற்றும் கிளிகள், பெரிய இருவாச்சி, மலபார் இருவாச்சி, கருங்காடை, சாம்பல் நெற்றிப் புறா, பச்சைப்புறா, செவ்வலகு செண் பகம், பெருங்கண்ணி, பருத்த அலகு ஆலா, சிறிய மீன் கழுகு, பெரிய புள்ளிப்பருந்து,
பழுப்பு காட்டு ஆந்தை, ஐரோப்பிய பஞ்சு ருட்டான், மலபார் மைனா மற்றும் கருஞ்சிவப்பு வால் பூச்சிபிடிப்பான் ஆகிய பறவைகள் பதிவு செய்யப் பட்டன. அதேபோல, கோவை வனக் கோட்டத்தில் மொத்தம் 170 பட் டாம்பூச்சி இனங்கள் கண்டறியப் பட்டுள்ன. இவற்றில் 15 இனங்கள் அழகிகள் குடும்பத்தையும், 25 இனங்கள் வெள்ளையன்கள், புல் வெளியான்கள், நுனிச் சிறகன்கள் குடும்பத்தையும், 50 இனங்கள் வரி யன்கள், சிறகன்கள், வசீகரன்கள் குடும்பத்தையும், 46 இனங்கள் நீலன்கள் குடும்பத்தையும், 38 இனங்கள் துள்ளிகள் குடும்பத்தை யும் சார்ந்தவையாகும். இதில், முக்கிய பதிவாக மேகு லேட் லேன்ஸர் என்னும் பட்டாம் பூச்சி இனம் கோவை வனக்கோட் டத்தில் முதன்முறையாக போளூ வம்பட்டி வனச் சரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மலை நாட்டு அழகி, கருப்பு - வெள்ளை அழகி, புள்ளிவால் அழகி, நீலகிரி மஞ்சள் புல்வெளி யாள், சாக்லேட் வெள்ளையன், கருத்த அந்திச்சிறகன், பெரிய அந் திச்சிறகன், கரும்பழுப்பு சிறகன், சிறு கோட்டு ஐந்து வளையன், பெயின்டட் கோர்டீசன், இந்தியன் பியர்ரோ, செஸ்ட்நட் ஆங்கிள் ஆகிய பட்டாம்பூச்சி இனங்கள் பதிவு செய் யப்பட்டுள்ளன, என்றார்.