திருப்பூர், அக்.28- சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான முதல மைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் திருப்பூர் மாவட்ட மாணவ, மாணவிகள் 16 பேர் முதல் மூன்று இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட் டிகள் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவு மற் றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் கபடி, மட்டை பந்து, கூடைபந்து, கால்பந்து, இறகுபந்து, தடகளம் உள்ளிட்ட மாவட்ட அளவில் 52 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 12 வகையான போட்டிகளும் மொத்தம் 64 வகையான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் திருப்பூர் மாவட்டத்தில் 19070 பள்ளி மாணவ மாணவியர்கள், 3510 கல்லூரி மாணவ, மாணவியர்கள், 1887 அரசு ஊழியர்கள், 1918 பொதுப்பிரிவு ஆண்கள் பெண்கள், 198 மாற்றுத்திறனாளி கள் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 26,583 நபர்கள் இணைய தளத்தில் பதிவு செய்திருந்தனர். இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள் 11,607, கல்லூரி மாணவ மாணவி யர்கள் 1,926, அரசு ஊழியர்கள் 634, பொதுப்பிரிவு ஆண்கள், பெண்கள் 1,012, மாற்றுத்திறனாளிகள் ஆண்கள், பெண்கள் 113 என மொத்தம் 15,292 நபர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் முதல் இடத்தில் 864 நபர்க ளும், இரண்டாமிடத்தில் 864 நபர்களும், மூன்றாமிடத்தில் 864 நபர்களும் என மொத்தம் 2,592 வீர வீராங்கனைகள் வெற்றி பெற்றனர். இதில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற 16 மாணவ, மாணவியர்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜிடம் வெற்றி பெற்ற சான்றிதழ்கள் மற்றும் பதக் கங்களை வழங்கி வாழ்த்து பெற்றனர்.