உடுமலை, பிப்.10- உடுமலை இலக்கியக் களத்தின் 13 ஆவது இலக்கிய நிகழ் வுக் கூட்டத்தில் சாகித்திய அகாடமி விருது பெற்ற தேவி பாரதி யின் நீர்வழிப் படூஉம் என்ற நாவலை திறனாய்வு செய்து உரை யாற்றப்பட்டது. உடுமலை இலக்கியக் களத்தின் 13 ஆவது இலக்கிய நிகழ்வுக் கூட்டம் சனிக்கிழமை உடுமலைப்பேட்டையில் துரை மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இதில், அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் முனைவர் தி.சத்யகலா கவிப் பேரரசு வைரமுத்துவின் சிகரத்தை நோக்கி என்னும் கவிதை சிறுகதையினை இலக்கிய மொழியிலும், பொள்ளாச்சி வாச கர் வட்ட செயலாளர் பூபாலன் மற்றும் கவிஞர் சோலை மாய வன் சிவக்கனி ஆகியோர் படித்ததில் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் பேசினார்கள். இதைத்தொடர்ந்து பட்டிமன்ற பேச்சாளரும் திறனாய்வாளருமான சுடர்விழி கடந்த 2023 ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்ற தேவி பாரதியின் நீர்வழிப் படூஉம் என்ற நாவலை திறனாய்வு செய்து உரையாற் றினார். இந்நிகழ்ச்சியில் அரசுக் கல்லூரி பேராசிரியர் முனை வர் வேலுமணி, ஆசிரியர் செல்லதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை கல்லூரி மாணவி பவித்ரா ஒருங்கிணைத்தார். நிறைவாக ஆசிரியர் இளையவன் சிவா நன்றி கூறினார்.