திருப்பூர், ஜன.17- நொய்யல் நதிக்கரையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம், திருப்பூர் மாநக ராட்சி மற்றும் நொய்யல் பண்பாட்டு அமைப்பு இணைந்து நடத்தும் திருப்பூர் பொங்கல் விழா மூன்றாம் நாள் நிகழ்ச்சி புதனன்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து மதத்தை சேர்ந்த 1008 பெண்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்தனர். திருப்பூர் மாவட்ட நிர்வாகம், திருப் பூர் மாநகராட்சி மற்றும் நொய்யல் பண் பாட்டு அமைப்பு இணைந்து நடத்தும் திருப்பூர் பொங்கல் விழா மூன்று நாட் கள் நடைபெற்றது. முதல் இரண்டு நாட் கள் மாலை நேரத்தில் பல்வேறு தமிழ் பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூன்றாம் நாள் திருப்பூர் நொய்யல் ஆற் றங்கரையோரம் திருப்பூர் மாநகராட்சிக் குட்பட்ட 60 வார்டுகளை சேர்ந்த 1008 பெண்கள் கலந்துகொண்டு வைக்கக்கூ டிய சமத்துவ பொங்கல் விழா நடைபெற் றது. இதில், அனைத்து மதத்தை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்தனர். சமத்துவ பொங் கலின் ஒரு பகுதியாக வள்ளி கும்மியாட் டம், பெருஞ்சலங்கை ஆட்டம், பறை இசை நடனம், சிலம்பாட்டம், தப்பாட்டம் மற்றும் மகிழ்ச்சி ஞாயிறு நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட் டுப் போட்டிகள் ஆடல், பாடல் நிகழ்ச்சி கள் உள்ளிட்டவை நடைபெற்றது. இதைக்காண திருப்பூர் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்கு மார் ஜி.கிரியப்பனவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன், துணை காவல் ஆணையர் அபிஷேக் குப்தா, துணை மேயர் பாலசுப்பிரமணியம் உட்பட பொதுமக்கள் மற்றும் தொடர்பு டைய அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டாடினர்.