districts

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 100 கடைகள்

சென்னை,ஜூன் 12-  சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பள வில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.  பேருந்துநிலையத்தில் பல்வேறு அடிப்படை பணிகள் நடந்து வந்தா லும் அடுத்த மாத கடைசியில் திறக்க முடிவு செய்துள்ளனர்.இந்த புதிய பேருந்து நிலையத்தில் 100 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகளை ஏலம் எடுக்க 1000 பேர்களுக்கு மேல் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதுகுறித்து அமைச்சர் பி.கே.ேசகர் பாபுவிடம் கேட்டதற்கு பேருந்து நிலை யத்தில் கடைகள் ஒதுக்கீடு பெறு வதற்கு கடும் போட்டி நிலவுவது உண்மைதான். இதை சமாளிப்பது பெரிய  சிரமமாக உள்ளது. எனவே சி.எம்.டி.ஏ. வழி காட்டி விதி முறைப்படி விரைவில் இதுபற்றி முடி வெடுப்போம் என்றார்.