districts

img

திருப்பூர் மாநகராட்சியில் ரூ.1.59 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் வரவு ரூ.1437.17 கோடி; செலவு ரூ.1438.76 கோடி

திருப்பூர், மார்ச் 31 – திருப்பூர் மாநகராட்சியில் 2023 – 24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது. இதில் மொத்த வருவாய் ரூ.1437 கோடியே 17 லட்சமாகவும், செலவு ரூ.1438  கோடியே 76 லட்சமாகவும் உள்ளது. இதன்  மூலம் பற்றாக்குறை ரூ.1 கோடியே 59 லட் சம் என்று பட்ஜெட்டில் காட்டப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் வெள்ளியன்று மாமன்றக் கூட்ட அரங்கில் மேயர் ந.தினேஷ்குமார் தலைமையில் நடை பெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் மற் றும் துணை மேயர் ஆகியோர் முன்னிலை யில் நிதிக்குழுத் தலைவர் கோமதி பட்ஜெட் அறிக்கையை மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினார். இந்த பட்ஜெட்டில், மாநகராட்சியில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படுவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டை தாக்கல் செய்து மேயர் தினேஷ் குமார் கூறுகையில், இந்த பட் ஜெட்டில் பல்வேறு புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ரூ.986.05 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, விடு பட்டுள்ள பகுதிகளில் பாதாள சாக்கடை திட் டப் பணிகளுக்கு ரூ.199.30 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இப்பணிகள் இந்த ஆண்டுக்குள்  நிறைவடையும்.

தெரு நாய்களை கட்டுப்படுத்த ரூ.44.58  லட்சம் ஒதுக்கப்பட்டு மூன்று இடங்களில் தெரு நாய் அறுவை சிகிச்சை மையம் அமைக் கப்பட உள்ளது. திருப்பூர் மாநகராட்சியில்  குடிநீர் விநியோகிக்கும் நேரத்தை குறுஞ் செய்தி மூலம் தெரிவிக்கும் திட்டம் நடை முறைப்படுத்தப்படும். சேகரிக்கப்படும் குப்பைகளை விஞ்ஞானப்பூர்வமாக உர மாக்கல் செய்ய திட்டமிடப்பட்டு 200 டன் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்ய நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  காலை சிற்றுண்டி திட்டத்திற்கு 4 இடங்க ளில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் ஒருங்கி னைந்த சமையல் கட்டிடம் கட்டப்படும். காலை சிற்றுண்டி திட்டம் மாநகராட்சி பள்ளிக ளிலும் துவங்கப்படும். ஆண்டிபாளையம் குளத்தை சுற்றுலா மேம்பாட்டு கழகத்து டன் இணைந்து படகு சவாரி மற்றும் பொழு துபோக்கு அம்சத்துடன் கூடிய சுற்றுலா தல மாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நெகி ழியில்லா திருப்பூர் திட்டத்தின் மூலம் பிளாஸ் டிக் பாட்டில்களை தானியங்கி இயந்திரத் தின் மூலம் ரூ.1க்கு கொள்முதல் செய்ய  உத்தேசிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு டன் கூடிய மகிழ்ச்சியான ஞாயிறு என்ற  திட்டத்தின் மூலம் மாதம் ஒரு ஞாயிற்றுக்கி ழமை கலை, கலாச்சாரங்களை பாதுகாக்க வும், இளைப்பாறும் வகையிலும் பல்வேறு கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்படும் என்று கூறினார். ஊடகங்களை சந்திக்காத பிரதமர்: மாநகராட்சி பட்ஜெட் குறித்து பாஜக உறுப்பினர்கள் விமர்சனம் செய்ததற்கு பதில்  அளித்து பேசிய மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், ஒன்பது ஆண்டுகளாக ஊடங்களை சந்திக்காத பிரதமரை கொண்ட கட்சி மாநக ராட்சி பட்ஜெட்டை குறை சொல்வது வேடிக் கையாக உள்ளதாகக் கூறினார். இந்த பட் ஜெட் சரியில்லை என்று அதிமுகவும், பாஜக வினரும் வெளிநடப்புச் செய்தனர். மற்ற கட்சி யினர் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற் றனர்.

;