districts

img

காவேரி மருத்துவமனையில் உலக இதய தின ஊர்வலம்

ஓசூர், அக்.5- உலக இதய தின விழாவை முன்னிட்டு ஓசூர் காவேரி மருத்துவமனை சார்பில் நடை பெற்ற விழாவிற்கு இயக்குநர் மருத்துவர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை சாராட்சியர் தேன்மொழி கொடியசைத்து துவக்கி வைத்தார்.  ஊர்வலத்தின் முடிவில் விளையாட்டு மைதானத்தில் விழிப்புணர்வு நிகழ்வாக இதயம் வடிவிலான சிவப்பு பலூன்களை மருத்துவமனை ஊழியர்கள், பணி யாளர்கள் வானில் பறக்க விட்டனர்.  சென்னை இயக்குநர் இருதயப் பிரிவு மருத்துவர் வெங்கடசுரேஷ், ஓசூர் இருதய மருத்துவர் அருள்ஞானசம்பந்தம் இருதயத்தை பாதுகாப்பது, காப்பாற்றுவது, நோய் வருமுன் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினார்கள். மார்க்கெட்டிங் மேலாளர் பிந்துகுமாரி நன்றி கூறினார். மருத்துவர் ஸ்ரீராம், மருத்துவ மனை மேலாளர் ஜோஸ், ஊழியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

;