கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் பயின்ற மாணவர்க ளுக்கான தமிழக அரசின் 7.5 விழுக்காடு மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களில் தேர்வான 21 மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்து மருத்துவ உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்வில் இயக்குநர் கோவிந்தன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி துணை முதல்வர் மருத்துவர் சாத்விகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகன் மற்றும் கல்வி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.