districts

img

இடிந்து விழும் நிலையில் மின் கம்பம்

கிருஷ்ணகிரி,டிச.28- ஓசூர் மாநகராட்சி 37 வது வார்டுக்குட்பட்ட மிடுகரப்பள்ளி தெருக்களில் 35 க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உள்ளன. இதில் 4 மின்கம்பங்களில் சிமெண்ட் கலவை உதிர்ந்து உடைந்து மிகவும் பழுதான நிலை யில் கம்பிகள் வெளியில் தெரி கிறது. குறிப்பாக, ஜெயந்தி நாகராஜ் என்பவர் வீட்டின் முன்பு உள்ள மின் கம்பம் வேகமாக காற்று அடித்தால் விழுந்துவிடும் நிலையில் உள்ளது. இதுகுறித்து மின்துறை அதிகாரிகளுக்கு ஐந்து முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. கிராம சபை கூட்டத்தில் புகார் தெரிவித்த போது அளித்த உறுதியும் நிறைவேற்றப்படவில்லை. மாநகராட்சி ஆணையரிட மும் தெரிவித்தும் பல னில்லை. அதிகாரிகள் மற்றும் மாநகராட்சியின் மெத்தனப் போக்கை கண்டித்து அனைத்திந்திய ஜனநாய மாதர் சங்கத்தினர் கருப்பு  கொடி ஏற்றியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டதுணைத் தலைவர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாநகர செயலாளர் ரத்தினா, தலைவர் புனிதா, கிளை தலைவர்கள் சத்தியா, சநதிரிகா, ஜெயந்தி, ராதா உள்ளிட்டோர் உரையாற்றி னர்.

;