அரியலூர், செப். 6 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளாரங்குறிச்சி ஊராட்சிக் குட்பட்ட சூரியமணல் கிரா மத்தில் துளாரங்குறிச்சி (வடக்கு) (தெற்கு), சூரிய மணல், சூரியமணல் வடக்கு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 800 குடும்ப அட்டை தாரர்கள் இந்த ரேசன் கடையை பயன்படுத்தி வரு கின்றனர். இந்த ரேசன் கடை கட்டிட மானது மிகவும் பழமை வாய்ந்து, பழுதடைந்துள் ளது. கடந்த 30 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ரேசன் கடையில், தற்போது மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் பெய ர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆங்காங்கே விரிசல் விட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே புகுந்து விடுகிறது. இதுகுறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்ற னர். மேலும் ரேசன் பொருட் கள் வாங்க வரும் பொது மக்கள், வெளியே வெயிலில் நீண்ட நேரம் காத்து நிற்கும் சூழல் உள்ளது. ரேசன் கடைக்கு முன்பாக நிழல் கொட்டகை அமைக்க வேண்டும் என சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு தக வல் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் முன், பழைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டி டம் கட்டித் தர வேண்டும். கடைக்கு முன்பாக பொது மக்கள் நிழலில் நிற்பதற்கு ஏதுவாக கொட்டகை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.