districts

img

இடிந்து விழும் நிலையில் அரசு ஊழியர் குடியிருப்பு: அச்சத்தில் ஊழியர்கள்

விழுப்புரம், ஆக. 26- விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தி லுள்ள அரசு ஊழியர் குடி யிருப்பு இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் அதனை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடி யிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அரசு ஊழியர் குடியிருப்பு கள் உள்ளன. இங்குள்ள 4  அலகுகளில் துணை ஆட்சி யர் நிலையிலான அலுவ லர்கள், அரசு அதிகாரி கள், அரசு ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளை பராமரிக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் உள்ளது. ஆனால் இங்குள்ள குடியிருப்புகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இந்த குடியிருப்புகளில் பரா மரிப்பு மேற்கொண்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாவ தாக குடியிருப்பவர்கள் தெரி விக்கின்றனர். இங்குள்ள குடியிருப்பு களில் பெரும்பாலான வீடு களின் சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. அவ்வப் போது கட்டிட மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் குடி யிருப்புவாசிகள் அச்சத்து டனேயே வசிக்கின்றனர். பல வீடுகளில் ஜன்னல் இல்லா மல் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. மேலும் சாலை, குடிதண்ணீர், மழைநீர் வடிகால் போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லை. கடந்த சில நாட்களாக விழுப்புரம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வியாழக்கிழமை(ஆக.26) அன்று இங்குள்ள ‘சிடு’ அலகு 2ஆவது மாடியில் சுவர் இடிந்து விழுந்தது. இந்த குடியிருப்பு பகுதி யில் அசம்பாவித சம்ப வம் நடப்பதற்கு முன்பு குடியிருப்புகளை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழி யர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.