districts

கெலவரப்பள்ளி அணையில் குவியல், குவியலாக ரசாயன நுரை

கிருஷ்ணகிரி,அக்.6- கர்நாடக மாநிலம் நந்தி மலை உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றின் வழியாக ஓசூர் கெல வரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.  கடந்த 1 ஆம் தேதி கெல வரப்பள்ளி அணைக்கு 908 கன அடி நீர் வரத்தாக இருந்தது. அது தற்போது 908 கன அடியாக அதி கரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும், அணையில் தற்போது 40.18 கன அடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாதுகாப்பு கருதி 908 கன அடி நீர் தற்போது ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.  இதனால் தென்பெண்ணை யாற்றில் அதிக அளவு தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. மழையை பயன்படுத்தி கர்நாடக மாநில எல்லைகளில் உள்ள தொழிற்சாலைகள ரசாயன கழிவு கள் அதிக அளவில் தென்பெண்ணை யாற்றில் திறந்து விட்டு வருவதால் ஆற்று நீரில் குவியல் குவியலாக ரசாயன நுரைகள் பொங்கி செல்கிறது. தென்பெண்ணை யாற்றில் அதிக அளவு தண்ணீர் வரும்போது ரசாயன கழிவுகள் திறந்து விடப்படுவதும் ஆற்றில் குவியல் குவியலாக ரசாயன கழிவுகள் செல்வதும் தொடர்கதையாக உள்ளது. இவ்வாறு ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

;