கிருஷ்ணகிரி, நவ. 22- சாலையோர சிறு கடை, தள்ளுவண்டி, பெட்டிக்கடை விற்பனையாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கிருஷ்ணன் (65) திங்களன்று (நவ. 21) காலமானார். தளி சாலையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டி ருந்த உடலுக்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் வாசுதேவன், பொருளாளர் ஸ்ரீதரன், மாவட்டத் துணைத் தலைவர் பி.ஜி.மூர்த்தி, சிபிஎம் மாநகரச் செயலாளர் சி.பி. ஜெயராமன், செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, எஸ்.ஆர்.ஜெய ராமன், சேதுமாதவன், ஆனந்தகுமார், நாகேஷ்பாபு, நடை பாதை விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன், சீனிவாசன், மாதவன், பாரதி உள்ளிட்ட பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் செவ்வாயன்று (நவ. 22) சொந்த ஊரான மேச்சேரியில் அடக்கம் செய்யப்பட்டது