districts

img

ஊருக்குள் புகுந்த யானை கூட்டம்

தேன்கனிக்கோட்டை, செப்.5- கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதி யில் 10-க்கு மேற்பட்ட யானைகள் சுற்றி திரிகின்றன. இரவு நேரங்களில் வனப் பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் கொத்தூர், நொகனூர், லக்க சந்திரம், மாரசந்திரம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் நுழைந்து விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு மரக்கட்டா கிராமத்தில் யானை தாக்கிய தில் விவசாயி வெங்கடேஷ் என்பவர் உயி ரிழந்தார்.  இந்நிலையில், கொத்தூர் கிராமத்துக் குள் 5 யானைகள் புகுந்தன. அப்போது வனப்பகுதி பக்கமாக சென்ற வர்கள் ஓட்டம் பிடித்தனர். ஆனால் யானை கள் குடியிருப்பு பகுதிக்குள் சென்றன . இத னால் கிராம மக்கள் அலறியடுத்து ஓட்டம் பிடித்து வீடுகளில் முடங்கினர். அப்போது சில இளைஞர்கள் ஒன்றிணைந்து யானைகளை சுற்றி வளைத்து அங்குள்ள தைல தோப்பில் சிறை பிடித்தனர்.  இது குறித்து தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தேன்கனிக்கோட்டை வனசரகர் முருகேசன் மற்றும் வனவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் பட்டாசு வெடித்தும், தாரை, தப்பட்டை அடித்தும் யானைக் கூட்டத்தை அங்கிருந்து நொகனூர் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

;