districts

img

மருந்து விற்பனை பிரதிநிதிகள் நிர்மல் பள்ளிக்கு நிதியுதவி

காஞ்சிபுரம், மார்ச் 23- தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் மாவட்ட ஆண்டு பேரவை கே.எஸ்.பி நினைவு இல்லம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. பேரவைக்கு மாவட்டத் தலைவர் ஜி.சுரேஷ் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டத் தலைவர் டிஸ்ரீதர் துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் பி.கோவிந்தன் வேலை அறிக்கையை, மாவட்டப் பொருளாளர் பி.பாலராமன் வரவு,செலவு அறிக்கையை சமர்பித்தார். சங்கத்தின் மாநிலத் தலைவர் சத்யநாராயணன் நிறைவு செய்து பேசினார். சிஐடியு மாவட்ட நிர்வாகி ஆர்.மதுசூதனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்திய தொழிற்சங்க மையம் நடத்தும்  நிர்மல் பள்ளிக்கு தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப்  பிரதிநிதிகள் சங்கம் காஞ்சிபுரம் கிளை சார்பில்  22ஆயிரத்து400 ரூபாயை  மாநில தலைவர் சத்யநாராயணனிடம் வழங்கபட்டது.