districts

img

கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்

கள்ளக்குறிச்சி, மார்ச் 7- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் திங்களன்று (மார்ச் 7) நடைபெற்றது. முதியோர், விதவை,  ஆதரவற்றோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் பாட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும், பல்வேறு கோரிக்கை மனுக்களை   மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். பின்னர் அவர் பேசுகையில், கொ ரோனா தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்  திறனாளிகளுக்கு தனியாக அமைக்கப்பட்டிருந்த இருக்கைக்கு சென்ற ஆட்சியர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் 34 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை காலுக்கான அளவீடு எடுக்கப்பட்டது. சுமார் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் சர்வதேச தரம் வாய்ந்த அதி நவீன செயற்கை கால்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.  அதனை தொடர்ந்து, சின்னசேலம் வட்டாசியர் அலுவலகத்தில் குடிமைப் பொருள் தனி வட்டாசியராக பணியாற்றிய பாண்டியன் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 23.5.2021இல் உயிரிழந்தார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை இறந்தவரின் வாரிசுதாரரும் மனைவியுமான செல்வராணியிடம் ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.விஜய்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) டி.சுரேஷ், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ராஜாமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் க.சுப்பிரமணி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

;