கடலூர்,நவ.9- 9 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கடலூர் மாவட்டத்தில் 21 லட்சத்து 34 ஆயிரத்து 802 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள், 10 இலட்சத்து 51 ஆயிரத்து 236 பேரும், பெண் வாக்காளர்கள் 10 லட்சத்து 83 ஆயிரத்து 310 பேரும் இதர வாக்காளர்கள் 256 உள்ளனர். இந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டளார். விழுப்புரம் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், சிபிஐ ராஜேந்திரன், திமுக சர்க்கரை, காங்கிரஸ் செல்வ ராஜ், பகுஜன் சமாஜ் கலிய மூர்த்தி, அதிமுக பசுபதி உள்ளிட்டோர் முன்னிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான சுருக்க வாக்காளர் பட்டியலை ஆட்சியர் மோகன் வெளியிட்டார். கள்ளக்குறிச்சி (தனி), உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தி யம், சங்கராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக் குட்பட்ட 2023 திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன் குமார் வெளியிட்டார்.