கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று (ஏப்.18) நடைபெற்றது. அப்போது ஆட்சியர் தன்விருப்ப நிதியிலிருந்து கடுமையாக பாதிக்கப்பட்ட 22 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.20,000 வீதம் 4.40 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சி.விஜய்பாபு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் டி.சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் பி.ஷெர்லி ஏஞ்சலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.