districts

கனியாமூர் பள்ளி கலவரத்தில் 371 பேர் கைது

கள்ளக்குறிச்சி,செப்.5- சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளியில் ஜூலை 17ஆம் தேதி அன்று பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் ஈடுபட்ட வர்களை சிசிடிவி காட்சி களை ஆதாரமாகக் கொண்டும், மேலும் கல வரத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடி யோ காட்சிகளை ஆதார மாகக் கொண்டும் சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறை யினர்  கைது செய்யும் நட வடிக்கையில் ஈடுபட்டு வரு கின்றனர்.  அந்த வகையில் கனியா மூர் பள்ளி கலவரத்தில் பள்ளி சொத்துக் களை சேதப்படுத்தியதாக சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சார்வாய்புதூர் கிராமத்தைச் சேர்ந்த சக்தி வேல் என்பவரையும்,  காவல்துறையின் வாக னத்தின் மீதும் கல்வீசி தாக்கிய வளையமாதேவி என்ற கிராமத்தை சேர்ந்த பார்த்திபன், ஹரிஹரன் ஆகிய 3 பேரை சிறப்பு புலனாய்வு குழு காவலர்கள் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு கைது செய்து கள்ளக்குறிச்சி 2-வது குற்ற வியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமது அலி முன்பு ஆஜர்ப்படுத்தி னர்.  தொடர்ந்து குற்ற வாளியை 15 நாட்கள் நீதி மன்ற காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார். கனியா மூர் பள்ளி கலவர த்தில் ஈடுபட்டதாக காவல்துறை யினர் மற்றும் சிறப்பு புல னாய்வு பிரிவு போலீசார் மூல மாக இது வரை 371 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

;