districts

‘நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்’ திட்டத்தில் கரூரில் 2.40 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி: ஆட்சியர் தகவல்

கரூர், ஏப்.13 - கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் கே.பேட்டை, மணத்தட்டை, வைகைநல்லூர் ஆகிய பகுதிகளில் செயல் படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் த. பிரபுசங்கர் செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார். அதில், உழவர் நலன் மற்றும் வேளாண் மைத்துறையின் சார்பில் இரணியமங்கலத் தில் “நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்” என்ற புதிய வேளாண் காடுகள்  வளர்ப்புத் திட்டத்தின் மூலம் தேக்கு, செம்மரம், மகோகனி உள்ளிட்ட பல்வேறு வகை யான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள விஜயா என்பவரது வயலை மாவட்ட ஆட்சியர்  பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியா ளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழக முதல்வர் தலைமையில் விவசாயி களின் நலன் காக்கும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அந்த  வகையில், விவசாயிகளுக்கு ஆண்டு முழு வதும் கூடுதல் வருமானமும் வேலை வாய்ப்பும்  கிடைக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல் தமிழ் நாட்டின் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திடவும், விவசாய நிலங்களில் நிரந்தர பசுமை சூழ்நி லையினை உருவாக்குவதற்கும் “தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர் வைக்கான இயக்கம்” என்ற புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தை முதல்வர் செயல் படுத்தியுள்ளார். கரூர் மாவட்டத்தில் மரம் சார்ந்த விவசா யத்தினை ஊக்குவித்திட, இத்திட்டத்தின் கீழ்  முதற்கட்டமாக 2.40 லட்சம் மரக்கன்றுகள் விவ சாயிகளுக்கு வழங்கப்பட்டு விவசாய நிலங்க ளின் வரப்புகளிலும்  குறைந்த செறிவில் விவ சாய நிலங்களிலும் நடவு செய்யப்பட்டுள்ளன.  

கரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ்,  57,149 தேக்கு மரக்கன்றுகள், 52,545 மகோ கனி மரக்கன்றுகள், 29,530 வேம்பு, 2,635  பெருநெல்லி, 75,547 செம்மரம், 11,130 புளிய மரம், 7,381 பூவரசுள், 340 வில்வம், 3,743 புங்கம்  மரக்கன்றுகள் என மொத்தம் 2,40,000 தரமான மரக்கன்றுகள் தமிழ்நாடு அரசு வனத்துறையின் கீழ் உள்ள சின்னதாதம் பாளையம் மற்றும் சுக்காம்பட்டி, கடவூர் ஆகிய  அரசு நாற்றங்கால்களில் உற்பத்தி செய்யப் பட்டுள்ளன. மரக்கன்றுகளை பராமரித்திட விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக 2 ஆம் ஆண்டு முதல் 4 ஆம் ஆண்டு வரை உயிரு டன் உள்ள மரக்கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 21 வழங்கப்படும். உதாரணமாக 1000 மரக் கன்றுகள் வைத்துள்ள விவசாயிக்கு மூன்றாண்டுக்கு ரூ.21,000 வழங்கப்படும்.  இத்திட்டத்தில் பயன்பெற சிறு, குறு விவ சாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 906 விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து பயனடைந்துள்ளனர். மேலும்  இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு,  மரக்கன்றுகள் விநியோகம் மற்றும் நடவுப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை அரசு இணைய தள செயலி வாயிலாக கண் காணிக்கப்பட்டு வருகிறது.   இத்திட்டத்தினால் வருங்காலங்களில் விவசாயிகளுக்கு ஒரு நிரந்தர வைப்புத் தொகை கிடைப்பதுடன், விவசாய நிலங்க ளின் மண் வளமும் அதிகரிக்கிறது. இதுமட்டு மின்றி, மாநிலத்தின் பசுமைப் பரப்பும், சுற்றுப் புறச் சூழலும் மேம்படுத்தப்படும்.  இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட  இயக்குநர் மந்திராச்சலம், செயற்பொறியா ளர் பாலகிருஷ்ணன், குளித்தலை வட்டார  வேளாண்மை உதவி இயக்குநர் ம.அர விந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;