கள்ளக்குறிச்சி, மே 7- கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்று ஓராண்டு நிறை வடைந்ததையொட்டி, ஓராண்டின் பணிகள் அணி வகுப்பு என்ற தலைப்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட சாதனை மலரை மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர், வெளியிட மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.இரா.மணி பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், இம்மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் அனைத்து துறைகளின் சார்பாக 5,41,530 பயனாளிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிக ளுக்கு சுமார் ரூ.2,411.16 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். உளுந்தூர்பேட்டையி லிருந்து தலைவாசல் வரை தேசிய நெடுஞ் சாலைகளில் சில பகுதிகளில் நான்கு வழிச் சாலையானது இருவழி சாலை யாக உள்ளதால் பல்வேறு விபத்து கள் ஏற்பட்டன. இதன் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சீரிய நட வடிக்கைகளால் இருவழிச் சாலைகள் தொடங்கும் இடங்களில் சாலை விபத்தைத் தடுக்கும் பொருட்டு, சாலையின் மத்தியில் போல்லார்ட்ஸ் பொருத்தப்பட்டதால், விபத்துகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தமிழக அரசின் அனைத்து திட்டப் பணிகள் மற்றும் நலத்திட்டங்களையும் பொதுமக்களுக்கு கிடைத்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் ஆட்சியர் கூறினார்.