districts

img

காவிரி ஆற்றிலிருந்து புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

கரூர், ஜூலை 16 - காவிரி ஆற்றிலிருந்து புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பாசனத்திற்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் தண்ணீர் திறந்து வைக்கப் பட்டது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் கிராமம் காவிரி ஆற்றின்  வலது கரையில் கட்டளை கதவணையி லிருந்து புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பிரிகிறது. இப்பாசன வாய்க்கால் கரூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்கள் வழியாக 133.80 கி.மீ பயணித்து பிடாரி ஏரி யில் கலக்கிறது. இவ்வாய்க்கால் மூலம் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் நேரடி பாசனமாகவும், 107 குளங்கள் வாயி லாக என மொத்தம் 20,622 ஏக்கர் நிலங்களுக்கு  பாசன வசதி அளிக்கிறது. எனவே விவசாய  பெருங்குடி மக்கள் நீரை சிக்கனமாக பயன் படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

;