districts

img

கும்பக்குழி வாய்க்கால் பாலம் சேதம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூர், டிச.4- கரூர் மாவட்டம் கட்டளை  - மாயனூர் செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியு மாக உள்ளது. இச் சாலையை சீரமைக்க அப்ப குதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சுப்பிர மணியன் கூறுகையில், ‘‘கட்டளை முதல் மாயனூர் வரை செல்லும் சாலையில் கட்டளை, ரெங்கநாதபுரம், மேல மாயனூர் ஆகிய கிரா மங்கள் உள்ளன.  மாயனூர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த கிராம  மக்கள் விவசாய பணி களுக்கு இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்ற னர். மேலும் இந்த சாலை  வழியாக கரூர், மாய னூர், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர், தொட்டி யம், முசிறி, தா.பேட்டை, திருச்சி, நாமக்கல் மாவட்டம் மோகனூர், வளையப்பட்டி, எருமைபட்டி, நாமக்கல் உள்ளிட்ட நகரங்களுக்கு பல்வேறு பணிகளுக்கும் நூற்றுக்கணக்கான இரண்டு சக்கரம் மற்றும் நான்கு  சக்கர வாகனங்கள், பேருந்துகள் சென்று வரு கின்றன.  இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் இரு  சக்கர வாகன ஓட்டிகள் கீழே  விழுந்து விபத்துகள் ஏற்படு கிறது. இந்த முக்கிய சாலையை புதிய தார்சாலை யாக அமைக்க சம்பந்தப் பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்த சாலையில் சுமார் 70 ஆண்டுகள் பழமையான கும்பக்குழி வாய்க்கால் பாலம் உள்ளது. இந்த பாலம் முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளது. எனவே, இந்த வாய்க்கால் பாலத்தை அப்புறப்படுத்தி, புதிய பாலத்தை கட்டி தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

;