districts

img

கரூரில் சிபிஎம் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கரூர், பிப்.17- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு  கூட்டணியின் சார்பில் கரூர் மாநக ராட்சி 41வது வார்டில் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம்.தண்டபாணிக்கு ஆதர வாக 41வது வார்டுக்குட்பட்ட அசோக் நகர், ஜீவா நகர்  பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிக்கப் பட்டது. அப்போது வேட்பாளர் எம்.தண்டபாணி பேசியதாவது,  கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 41வது வார்டு களில் பொதுமக்களின் முக்கிய பிரச்சனையான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகளை செய்து கொடுக்காமல், எவ்வித வளர்ச்சி பணிகளும் செய் யாமல் பின் தங்கிய பகுதியாக வைத்திருந்தனர். இந்த நிலைமையை மாற்றுவதற்கும், 41 வது வார்டு வளர்ச்சி பெற்ற வார்டாக அனைத்து விதத்தி லும் வளர்ச்சி பெற்ற வார்டாக மாற்றுவதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டி யிடும் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், 41 வது வார்டு பொதுமக்களின் கோரிக் கைகளை கேட்டறிந்து உடனுக்குடன் நிறை வேற்றி தருவேன்.  பெண்களின் நலனை கருத்தில் கொண்டு பொது சுகாதார வளாகம் அமைத்திட உடனடி யாக நடவடிக்கை எடுப்பேன்.

காவிரி குடிநீர் தினந்தோறும் வீடுகளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுப்பேன். சாக்கடை கால்வாய்கள் அமைத்து கொடுப்பதற்கும், அனைத்து தெருக்களுக்கும்  தரமான தார் சாலை, தெருவிளக்குகள் புதுப் பிக்கப்படும். தெருவிளக்கு இல்லாத பகுதிக ளுக்கு புதிய தெரு விளக்குகள் உடனடியாக அமைத்து கொடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பேன்.  பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வழங்குவதற்கும்,  எப்போதும் தன்னை சுலபமாக சந்திப்பதற்கும் 41 வது வார்டு பகுதிகளில் அலு வலகம் அமைக்கப்படும். கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட எப்போதும் பணிகள் செய்திட தயாராக இருக்கிறேன் என்று பேசினார். இதில், சிபிஎம் கரூர் மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ஹோச்சுமின், திமுக தாந்தோணி தெற்கு நகர செயலாளர் சுப்பிரமணியன், திமுக 41வது வார்டு  செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;