districts

img

அரவக்குறிச்சியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு அமைச்சர் வாக்குச் சேகரிப்பு

கரூர், பிப்.18 - திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பேரூராட்சி 1 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே.வி.கணேசனுக்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திலும், மற்ற திமுக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வாக்குச் சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.  அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் ரா.இளங்கோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஆர்.ராஜாமுகமது, அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் எம்.ஆறுமுகம், திமுக நகரச் செயலாளர் அண்ணாதுரை, இளைஞரணி ஆனந்த், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

;