கரூர், மே 14 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் நான்காவது ஆண்டு ரத்த தான முகாம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கலைவாணர் கூட்டரங்கில் நடை பெற்றது. ரத்த தான முகாம் கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே.சக்திவேல் வரவேற் றார். மாவட்ட வருவாய் அலுவலர் ம.லியாகத் ரத்ததான முகாமை துவக்கி வைத்து பேசி னார். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை முதல்வர் ஆர்.முத்துச்செல்வன் சிறப்புரையாற்றினார். சிஐடியு கரூர் மாவட்ட தலைவர் ஜி.ஜீவா னந்தம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலு வலர் சங்க மாநிலச் செயலாளர் எம்.எஸ். அன்பழகன், அரசு மருத்துவமனை ஊழியர் கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் சி. கண்ணன், வங்கி ஊழியர் சங்க தலைவர் ஐ. வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் எம்.செல்வராணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். சங்க நிர்வாகி கள், வட்டார தலைவர்கள் உறுப்பினர்கள் ரத்த தானம் செய்தனர். கரூர் மாவட்ட அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக பெற்ற ரத்தங்கள் வழங்கப்பட்டன.