கரூர், ஜூலை 26 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரவக் குறிச்சி ஒன்றியக் குழு கூட்டம் பள்ளபட்டி யில் நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பி னர் பி.மருதமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.கந்த சாமி, சி.ஆர்.ராஜாமுகமது ஆகியோர் எதிர்கால பணிகள் குறித்து பேசினர். மாவட்டக் குழு உறுப்பினர் கே.வி.கணேசன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைகளில் தினம்தோறும் நூற்றுக் கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆனால் அரவக்குறிச்சி, பள்ளபட்டி அரசு மருத்துவமனைகளில் பகல் நேரத்தில்கூட மருத்துவர்கள் இருந்து சிகிச்சை அளிப்பதில்லை. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மருத்துவர்கள் இல்லாமல் இருப்பதால், சாதாரண சிகிச்சைக்குக்கூட கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி விடுகின்றனர். இதனால் நோயாளிகள் பல்வேறு சிரமங்களை சந்திக் கின்றனர். இந்த அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இசிஜி, எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து மருத்துவ வசதிகளையும் செய்திட வேண்டும். அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு குடிநீர், கழிப்பிட வசதி இல்லை. உடனடியாக சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர், இலவச கழிப்பிட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.