districts

img

குலசேகரம் அருகே பெண் மீது திராவகம் வீச்சு கடுமையான நடவடிக்கை எடுக்க மாதர் சங்கம் கோரிக்கை

குலசேகரம், மார்ச்.31- குலசேகரம் அருகே மாடத் தூர் கோணத்தை சேர்ந்தவர் லதா (46). கணவர் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இவ ருக்கு சுபாஷ் (26) என்ற மகன் உள்ளார். ராணுவ வீரரான சுபாஷ் தற்போது விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். லதா, சித்திரங்கோட்டில் ரைஸ் மில் நடத்தி வருகிறார். இவர் தினம் தோறும் காலையில் ரைஸ் மில்லுக்கு பேருந்தில்  சென்று விட்டு இரவு சுமார் 8  மணி அளவில் வீடு திரும்புவது வழக்கம்.  இந்நிலையில் லதா வியாழன் சுமார் இரவு 8 மணிக்கு மாடத்தூர் கோணம் விலக்கில் பேருந்தில் வந்து இறங்கி வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். இவர் பிரதான சாலையிலிருந்து உள் சாலையில் சுமார் 100 மீட்டர் தூரம் நடந்து சென்ற நிலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் இவர் மீது ஆசிட்டை வீசிவிட்டு தப்பியுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் இருளாக இருந்ததால் அந்த வாலிபர்கள் எளிதில் தப்பிவிட்டனர். இந்நிலையில் லதாவின் அலறல் கேட்டு அப்பகுதியினர் விரைந்து வந்து அவரை அருகில் உள்ள ஒருவரின் வீட்டிற்கு கொண்டு சென்று அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் தகவல றிந்து வந்த அவரது மகன் சுபாஷ் உதவி யுடன் அவரை குலசேகரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த குலசேகரம் போலீஸ் நிலையத்தி னர் சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சி களை கைப்பற்றி இந்த செய லில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர்.தற்போது  காவல்துறை துணை கண்கா ணிப்பாளர் அறிவுறுத்த லின்படி தனி படை அமைக் கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மாதர் சங்கம் கண்டனம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் குமரி மாவட்ட நிர்வாகி வழக்க றிஞர் டெல்பின், குலசேகரம் வட்டார தலை வர் ஷீஜா, செயலாளர் மீனா மற்றும் மல்லிகா ஆகியோர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லதாவை வெள்ளிக்கிழமை காலையில்  நேரில் சென்று பார்த்தனர்.  பின்பு அவர்கள் கூறியதாவது, தற்போது குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான பிரச்ச னைகள் எழுந்து வருகின்றன. இந்நிலை யில் குலசேகரம் பகுதியை சேர்ந்த லதா வேலை முடிந்து வீடு திரும்பும் போது சமூக விரோத கும்பல்கள் திராவகம் வீசியதை வன்மையாக கண்டிக்கிறோம். அது மட்டும் அல்லாமல் பெண்கள் மீதான பிரச்சனை களுக்கு உள்ளாகும் நபர்கள் மீது பார பட்சமின்றி கடுமையான நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ள வேண்டும். தற்போது லதா மீது திராவகம் வீசி சென்ற சமூக விரோதிகள் மீதும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

;