districts

img

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் திருஆருரான் சர்க்கரை ஆலை ! விருத்தாசலம் சாராட்சியர் அலுவலகம் முற்றுகை

கடலூர்,ஜன.5- கரும்பு விவசாயிகளை ஏமாற்றி வயிற்றில் அடிக்கும் ஏ.சித்தூர் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து விருத்தாசலம் சாராட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் வியாழனன்று (ஜன.5) முற்றுகை போராட்டம் நடத்தினர். ஒன்றிய-மாநில அரசு அறிவித்துள்ள கரும்புக்கான முழு தொகையையும் வட்டி யுடன் ஒரே தவணையில் வழங்க வேண்டும்,  ஏ. சித்தூர் திருஆரூரான் சர்க்கரை ஆலை உரிமையாளர் தியாகராஜன் முறைகேடாக கரும்பு விவசாயிகள் பெயரில் சுமார் ரூ.300 கோடி தேசிய வங்கியில் அடமான வைத்து ஏமாற்றியதை அவரை கைது செய்து வங்கிக் கடனை முழுமையாக வசூலிக்க வேண்டும். கரும்பு விவசாயிகள் பணத்தை பிடித்தம் செய்து இதுநாள் வரை வங்கி களுக்கு அனுப்பாமல் உள்ள கரும்பு பயிர்க் கடன் தொகையை முழுமை யாக ஒரே தவணையாக வழங்க வேண்டும். வெட்டுக் கூலி வாகன வாடகை முழுவதும் வட்டியுடன் வாகன உரிமை யாளருக்கு வழங்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விருத்தாசலம் சாராட்சியர் அலு வலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடை பெற்றது.  இந்த முற்றுகை போராட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் ஜெ. நாகராஜன் தலைமை தாங்கி னார். மாநில பொதுச் செயலாளர் டி.ரவிந்திரன், மாநில துணைத் தலைவர் ஜி.ஆர். ரவிச்சந்திரன், மாநிலச் செயலாளர் தங்க. காசிநாதன் ஒருங்கிணைப்பாளர் தன வேல், மாவட்டச் செயலாளர் ஆர்.கே. சரவணன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

;