districts

img

குருக்கி பேட்டை வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு

கடலூர், நவ. 3- கடலூர் புருக்கீஸ் பேட்டை மஞ்சனிக்குப்பம் பகுதியில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட் டுள்ளதாகக் கூறி மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியி ருந்தனர். இந்நிலையில் வியாழனன்று (நவ.3) மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் முரளி தலைமையில் ஆய்வாளர்கள் அருள், தினகரன் மற்றும் ஊழியர்கள் ஜேசிபி இயந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க காவல் ஆய்வாளர் உதய குமார் தலைமையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கச் சென்றபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநகரச் செயலாளர் ஆர்.அமர் நாத் தலைமையில் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே.பகி ரான், மாநகர குழு உறுப்பினர் கள் அந்த பகுதி பொதுமக்கள் சேர்ந்து ஜேசிபி வாகனத்தை முற்றுகையிட்டு வீடுகளை இடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அங்கிருந்த அதிகாரி யிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தபோது ஒரு பெண் திடீரென்று மண்ணெண்ணெய் கேனை எடுத்து வந்து தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல் துறையினர் அந்த பெண்ணிடம் இருந்த கேனை பறிமுதல் செய்த னர். மேலும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும், காலி செய்வதற்கு போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் என  வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து காவல் துறையினர் வட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சி யர் உறுதியளித்தார். இதையடுத்து   வீடுகளை இடிக்காமல் அதிகாரி கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

;