districts

லாட்டரி சீட்டு  விற்றவர் கைது

கடலூர், ஜன. 6- கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல் துறையினருக்கு நெடுஞ்சாலை பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் பண்ருட்டி கும்பகோணம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவுலியா நகரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (46) என்பவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து, அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.