கடலூர், ஏப். 15- நெய்வேலி நிலக்கரி நிறு வனத்தின் பணிகளில் தமிழ்நாட்டை சார்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கடலூர் மாவட்டச் செயலாளர் கோமாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பட்டதாரி பொறியியல் பயிற்சி பணிக்கு 300 பணியிடங் களுக்கான அறிவிப்பு கடந்த 26ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் பட்டதாரிகளுக்கான இப்பணிக்கு விண்ணப்பிக்க கேட் 2022 தேர்வில் தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கேட் தேர்வுகள் எம்.டெக் போன்ற மேற்படிப்புக ளுக்காக எழுதப்படுபவை. மேற்படிப்பு எண்ணம் இல்லாதவர்கள் ‘கேட்’ தேர்வு எழுதுவதில்லை. ஆனால் இப்பணிக்கான கேட் தேர்வு அடிப்படைத் தகுதியாக வைக்கப்படுமேயானால், முன்கூட்டியே அதற்கான அறிவிப்பு கள் வெளியிடப்படும். கடந்த ஆண்டு களில் (2014 - 2018) முன்கூட்டியே விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கேற்ப ‘கேட்’ தேர்வு எழுதி, தயாராக இருப்பார்கள். தற்போதும் அத்தகைய விளம்பரங்களை முன்கூட்டியே வெளியிட்டுத்தான் கோல்இந்தியா, இந்தியன்ஆயில் போன்ற நிறுவனங்கள், தங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரை ‘கேட்’ தேர்வுக்குத் தயார்படுத்தச் செய்கின்றன.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டு ‘கேட்’ தேர்வு இல்லாமல், என்.எல்.சி. நிர்வாகம் நடத்திய தேர்வு மூலம் பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டுக்கு ‘கேட்’ தேர்வின் அடிப்படையிலேயே பணியாளர்கள் எடுக்கப்படுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டிருந்தால், என்.எல்.சி. சார்பில் முன்கூட்டியே ‘கேட்’டுக்குத் தயார்படுத்தக்கோரும் விளம்பரம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வெளியாகவில்லை. கடந்த ‘கேட்’ தேர்வு 2021இல் முடிந்து அதன் தேர்வு முடிவு கள் டிசம்பர் இறுதியில் வெளியாகி விட்டன. ஆனால், ‘கேட்’ தேர்வு அடிப்படையிலேயே பணியிடம் நிரப்பப்படும். ஏப்ரல் 11ஆம் தேதியே விண்ணப்பிக்க இறுதி நாள் என்று இப்போதைக்கு ‘கேட்’ தேர்வு எழுத முடியாத சூழலில் அறிவித்திருப்பது, வாய்ப்பை மறுக்கும் அடாத செயலாகும். ஒன்று முந்தைய முறையைப் பின்பற்றி ‘கேட்’ தேர்வு இல்லாமல், நெய்வேலி நிலக்கரி நிறுவனமே தனித்தேர்வு நடத்தி பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும் அல்லது ‘கேட்’ தேர்வு கட்டாயம் என்பதை அறிவித்துவிட்டு, எழுதுவதற்கான வாய்ப்பு அமைந்த பின், அதனடிப்படையில் பணி நியமனத்திற்கான நேர்காணலை நடத்த வேண்டும். மற்றவர்களுக்கு மட்டும் பயன்படும் வாய்ப்பாக இப்படி திடீ ரென ஒரு ‘கேட்’டைப் போடுவது கண்டனத்திற்குரியது. என்.எல்.சி நிர்வாகம் உடனடியாக இந்த விளம்பரத்தைத் திரும்பப்பெற்று, நியாயமாக அனைவரும் விண்ணப்பிக்க வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சி கடலூர் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.