districts

தேசிய பேரிடர் மீட்பு படையின் விழிப்புணர்வு பயிற்சி

கடலூர், மே 28- கடலூர் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சியளித்தனர். அரக்கோணத்தில் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஆய்வாளர் அருண்குமார் சுவான் தலைமையில் 20 பேர் கொண்ட குழு கடந்த 15ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தது. மழை-வெள்ளத்தின் போது பாதிப்பு ஏற்படக் கூடிய சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அங்கு பேரிடர் காலங்களில் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளித்தது. பின்னர் கடலூர் வட்டாட்சியர் இரா.பூபாலச்சந்திரன் தலைமையில் புனித அன்னாள் முதியோர் காப்பகத்தில் முதியோர்களுக்கு பயிற்சி அளித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு மரக்கன்று நட்டனர். பிறகு, கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். இந்த நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் ச.அசோகன், தேர்தல் துணை வட்டாட்சியர் வெற்றி செல்வன், வருவாய் ஆய்வாளர் ஏ.உதயச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

;