districts

img

ஏ.பி.குப்பத்தில் 4 வீடுகள் தீக்கிரை

பண்ருட்டி, மார்ச் 19- கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை ஏ.பி.குப்பம் காலனி மேற்கு தெருவை சேர்ந்தவர் வீரன். கூலி தொழிலாளி. இவரது கூரை வீட்டில் வெள்ளியன்று (மார்ச் 18) திடீரென்று மின்கசிவு காரணமாக தீ பிடித்தது. தகவல் அறிந்ததும் பண்ருட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். எனினும் 4 வீடுகள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.