districts

img

காவலர் மீது பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது

கடலூர்,மே 12- சிதம்பரம் அருகே திருட்டை தடுக்க முயன்ற காவலர்கள் மீது பெட்ரோல் குண்டு  வீசப்பட்ட சம்பவத்தில் 4 பேரை காவல்துறை யினர் கைது செய்தனர். கடலூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமான  பணி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங் கப்பட்டது. இதற்காக அங்கு பெரிய இரும்பு தளவாடங்கள், தாமிர கம்பிகள் ஆலை வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் தானே புயல் வீசியதில்  கட்டிடங்கள் சேதமானது. அதன் பின்னர் அந்த கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டது. எனினும் இந்த தொழிற்சாலையில் இரும்பு  பொருட்கள், தாமிர கம்பிகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அப்படியே வைக்கப் பட்டிருந்தது. இதனை காவலாளிகள் இரவு பகல் பாராமல் கண்காணித்து வந்தனர். கடந்த மாதம் 24 ஆம் தேதி 50க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் ஆலைக்குள் புகுந்து இரும்பு தளவாட பொருட்கள் தாமிர கம்பிகளை திருடினர். இந் நிலையில், மே 11 அன்று அதிகாலையில் ஆலையில் திருடிய 50க்கும் மேற்பட்ட கொள்ளையர்களை காவலர்கள் பிடிக்க சென்றபோது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் 3 பெட்ரோல் குண்டுகள் வெடித்து சிதறியது. இதில் வெடிக்காத மூன்று குண்டுகளை கைப்பற்றிய காவல்துறையினர் ஆய்வுக்கு அனுப்பினர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை காவலர் கள் வியாழனன்று (மே 12) இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

;