கடலூர்,ஜன.27- கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே விசிக மாநாட்டுக்குச் சென்று திரும்பிய வேன் மீது லோடு ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ‘வெல்லும் சனநாய கம்’ மாநாடு வெள்ளியன்று திருச்சியில் நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளி லிருந்தும் விசிக தொண்டர்கள் சென்றனர்.
அந்த வகையில், சிதம்பரம் அருகே வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 25 பேர் மாநாட்டில் கலந்து கொண்டனர். இவர்கள் மாநாடு முடிந்து வீடு திரும்பியபோது, சேலம் – விருத்தாசலம் மாநில நெடுஞ் சாலையில் என்.நாரையூர் கைகாட்டி அருகே வேனில் வந்து கொண்டிருந் தபோது எதிரே லோடு ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் உத்திர குமார், யுவராஜ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். பலத்த காயமடைந்த அன்புச் செல்வன் என்பவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலை யில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 15-க்கும் மேற் பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு வேப்பூர் மற்றும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வேப்பூர் காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.