ஊட்டி, மே 9- ஊட்டி தாவரவியல் பூங்கா வில் மே 10 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 11 நாட்கள் 126 ஆவது மலர்க்கண்காட்சி நடை பெறுகிறது.
இதையொட்டி, தாவர வியல் பூங்காவில் பல்வேறு வகையான 5 லட்சம் மலர்ச்செடி கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இன்கா மேரிகோல்டு, பிரஞ்ச் மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டூ னியா, பேன்சி, டயான்தஸ், பிகோ னியா, டேலியா, பால்சம், ரெனன் குலஸ், வயோலா, அஜிரேட் டம், கேலண்டுலா, கிளாடியோ லஸ், லில்லியம், சூரியகாந்தி, சப்னேரியா போன்றவை பூங்கா வில் பல்வேறு பகுதிகளில் மலர் பாத்திகளில் நடவு செய்யப்பட்டு பொலிவுடன் காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றன. ரோஜாக் களால் பிரம்மாண்ட டிஸ்னி வேர்ல்டு, மலை ரயில், ஆக்டோ பஸ், காளான் மற்றும் பல்வேறு வடிவங்களை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.
45 ஆயிரம் தொட்டிகளில் உள்ள செடிகளில் மலர்கள் பூத்துகுலுங்குகின்றன. இவை காட்சி மாடத்தில் பார்வையாளர் களை கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்பட் டுள்ளன.
மேலும் 1 லட்சம் ரோஜா மலர் களை கொண்டு பிரம்மாண்ட டிஸ்னி வேர்ல்டு, காளான், ஆக் டோபஸ் மற்றும் மலர் கோபு ரங்கள் உட்பட 10 வகையான மலர் அலங்காரங்கள் பல லட் சம் ரோஜா மலர்கள், கார்னே சன் மற்றும் செவ்வந்தி மலர் களை கொண்டு பல்வேறு அலங் காரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்கான கார் னேசன் உள்ளிட்ட மலர்கள் பெங்களூரு, ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.
தோட்டக்கலைத்துறை சார் பில் பல்வேறு அரங்கு அமைக் கப்பட்டுள்ளன. மலர்கள், காய் கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களின் முக் கியத்துவத்தை எடுத்துக்காட் டும் வகையில் பல்வேறு மாவட் டங்களில் இருந்து முக்கிய கண் காட்சி பொருட்கள் கொண்டு வரப் பட்டு வைக்கப்படவுள்ளன.