districts

img

ஹெலிகாப்டர் விபத்தில் 7 ராணுவ உயர் அதிகாரிகள் பலி  

குன்னூரில் மேகமூட்டத்தின் காரணமாக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 7 ராணுவ உயர் அதிகாரிகள் பலியாகியுள்ளனர்.   

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டனில் ராணுவ அலுவலர்களுக்கான பயிற்சி கல்லூரி மற்றும் மையம் உள்ளது. இந்த பயிற்சி முகாமின் உயர் அதிகாரிகள் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெல்லிங்டன் ராணுவ மையத்திற்கு பயணம் செய்ததாக தெரிய வருகிறது. இன்று காலை  மேக மூட்டத்தின் காரணமாக ஹெலிகாப்டர் அப்பகுதியில் இருந்த மலையின் மீது மோதியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமைத்தளபதி பிபின் ராவத் பயணித்தார் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

இந்த ஹெலிகாப்டரில் முக்கிய ராணுவ உயரதிகாரிகள் 14 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. நீலகிரியில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் விமானப்படையின் எம்.ஐ. வகையை சேர்ந்தது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டர் தீப்பிடித்ததில் உடல் கருகி உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 3 பேரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.  விபத்தில் சிக்கிய மற்றவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.    

மேலும் இந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத்தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் நிலை என்ன என்பது குறித்து அதிகாரத்தகவல் வெளியாகவில்லை.

;