districts

img

ஒரு மாதத்திற்கு மேல் குறையாத நீர்மட்டம்: அமராவதி அணையில் உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றம்

 உடுமலை, டிச.31- நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும்  தொடர் மழையால் அமராவதி அணை ஒரு  மாதத்திற்கு மேலாக முழு கொள்ளளவை எட் டியுள்ளது. இதன் காரணமாக அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே ஆற்றில் வெளி யேற்றப்பட்டு வருகிறது. உடுமலை அருகே அமைந்துள்ள அமரா வதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது.  இந்த அணையில் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர்  விளைநிலம் பாசன வசதி பெற்று வருகிறது.  இதே போல கல்லாபுரம், ராமகுளம் வாய்க் கால்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளை  நிலம் நேரடி பாசன வசதி பெற்று வருகிறது.  அமராவதி அணையின் நீர்ப் பாசன வசதியை  ஏற்படுத்துவது மட்டுமின்றி அமராவதி ஆற் றின் வழியோர கிராமங்களில் கரூர் வரை  வசிக்கின்ற பொதுமக்களின் குடிநீர் தேவை,  கால்நடைகளின் குடிநீர் தேவையையும்  நிறை வேற்றி வருகிறது. நூற்றுக்கணக்கான கிரா மப்பகுதிகளில் கூட்டுக் குடிநீராக தாகம் தணிக்கிறது.  இந்த அணையில் 4.04 டிஎம்சி  தண்ணீரைத் தேக்கி வைக்க  முடியும். தற்போது 3.99 டிஎம் சிக்கு நீர் இருப்பு உள்ளது‌.  அணையின் நீர்மட்டம் 89 அடி யைத் தாண்டி உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகு திகளான வால்பாறை, கொடைக்கானல் மற்றும்  மறையூர், மூணாறு, தூவானம் உள்ளிட்ட பகு திகளில்  பெய்து வரும் மழையின் காரண மாக அணைக்கு நீர்வரத்து கடந்த 10 நாட்க ளாக அதிகரித்து வருகிறது. கடந்த 11  ஆம் தேதி இரவு அணைக்கு  1000 கன அடி களை கடந்து நீர் வரத்து வந்தது. இதை யடுத்து அணையில் ஏற்கனவே 89.5 அடிக்கு  நீர் தேக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு கருதி  வரத்து நீர் முழுவதும் அமராவதி ஆற்றில் உப ரியாகத் திறந்து விடப்பட்டது‌.   இதற்கிடையே வெள்ளியன்று காலை 8  மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட  அணையில் 89.18 அடிக்கு நீர் மட்டம்  இருந் தது. அணைக்கு வினாடிக்கு 1250 கன அடி  தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையி லிருந்து 1313 கன அடி தண்ணீர் உபரியாக ஆற் றில் வெளியேற்றப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக உபரி நீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுவதால் விவசா யிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

;