districts

img

இராமநாதபுரத்தில் வாகனங்களை நிறுத்தி சிஐடியு போராட்டம்

இராமநாதபுரம்,மார்ச் 1- ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள மோட்  டார் வாகனச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆன்-லைன் மூலம் வாகன ஓட்டி களுக்கு கூடுலான அபராதத் தொகை  விதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பிப்ரவரி 28 செவ்வா யன்று சிஐடியு சார்பில் சாலைகளில் வாக னங்களை 15 நிமிடங்கள் நிறுத்தி போராட்டம் நடைபெற்றது.  இராமநாதபுரம் ,இராமேஸ்வரம், பர மக்குடி, தொண்டி, சிக்கல், பார்த்திப னூர், ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இராமநாத புரத்தில் சிஐடியு அரசு போக்குவரத்து மத்திய சங்க நிர்வாகி வி.பாஸ்கரன் மற்றும்  100 பேர் பங்கேற்றனர்.  இராமேஸ்வ ரத்தில் சிஐடியு நிர்வாகிகள் என்.பி.செந்தில், சுடலைக்காசி, கடலாடி கிழக்கு சிக்கல்  மையத்தில் ஜெயக்குமார் போஸ் தலைமை யில் போராட்டம் நடைபெற்றது. பரமக்குடி யில்  ஆட்டோ சங்க நிர்வாகிகள் டி ராஜா , முனியசாமி தலைமையிலும் தொண்டி மையத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.சந்தானம் தலைமையில் போராட் டம் நடைபெற்றது.

;