districts

img

பத்தாம் வகுப்பில் மாநில முதலிடம் காவியா ஜனனிக்கு சிபிஎம் தலைவர்கள் பாராட்டு

இராமநாதபுரம்,  மே 13 - இராமநாதபுரம் மாவட் டம், கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  மாணவி பேரையூர் காவியா ஜனனி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முத லிடத்தைப் பிடித்தார்.

சாதனை மாணவிக்கு தமிழக அமைச்சர்களும், பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஆர். கருமலை யான், மாவட்டச் செயலாளர் வி. காசிநாததுரை ஆகி யோர் மாணவி காவியா ஜன னியை, அவரின் வீட்டிற்குச் சென்று வாழ்த்திப் பாராட்டி யதுடன் பரிசு வழங்கினர்.

சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் இரா. முத்து விஜயன், கமுதி தாலுகா செயலாளர் கண்ணதாசன், முதுகுளத்தூர் தாலுகா செயலாளர் வி. முருகன், பேரையூர் கிளைச் செய லாளர் முருகேசன், உடற் கல்வி ஆசிரியர் இராம மூர்த்தி ஆகியோர் உடனி ருந்தனர்.